வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் உற்பத்தி! - இயற்கையை பாதிக்குமா?

 







ஒன்றிய அரசு, வடகிழக்கு மாநிலங்களில் பாமாயிலை உற்பத்திசெய்ய முடிவெடுத்துள்ளது. சாதாரண பிற எண்ணெய் வித்துகளை விட பாமாயில் விளைவிக்க பனைக் கன்றுகளை ஊன்றுவது எதிர்காலத்தில் பயன் கொடுக்கும் என ஒன்றிய அரசு கருதுகிறது. விவசாயத்துறை இதற்கான அனுமதியை ஏற்கெனவே கொடுத்துவிட்டார். 

சூழலியலாளர்கள், ஒற்றைப் பயிரை மட்டுமே ஒரு இடத்தில் பணப்பயிராக வளர்ப்பது இயற்கை சூழலை கெடுக்கும் என்று கூறிவருகின்றனர். அரசு இதைக் காதுகொடுத்து கேட்கவே இல்லை.  11,040 கோடி ரூபாய் திட்டமாக இதனை பிரதமர் கடந்த வாரமே அறிவித்துவிட்டார். தேசிய சமையல் எண்ணெய்க்கான தேவையாக ஒன்றிய அரசு பாமாயிலை கருதுகிறது. இந்த திட்டம் 1980இல் பரிசீலிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்காக கைவிடப்பட்டது என்று முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

பனை கன்றுகளை மட்டுமே குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஊன்றுவது அங்குள்ள பன்மைத்துவ சூழலை குலைக்கும். நீர் தேவையை அதிகரிக்கும் என பல்வேறு குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. பனைக் கன்றுகள் வடகிழக்கு மாநிலங்களில் விளையும் பயிர் கிடையாது. இதனை அங்கு விளைவிப்பது அதன் இயற்கையான தன்மையை பாதிக்கும் என உயிரியலாளர் பிபாப் தாலுக்தார் கூறியுள்ளார். காட்டில் இதனை வளர்த்தாலும், காடல்லாத இடங்களில் வளர்த்தாலும் ஏற்படும் விளைவுகளை ஆவணப்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறார் பிபாப். 

28 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பனைக் கன்றுகளை நடுவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள நிலங்களின் எண்ணிக்கை. ஒன்பது லட்சம் ஹெக்டேர் என்பது வடகிழக்கு மாநிலங்களில் விவசாயம் செய்யப்படும் பனை வித்தின் அளவு. 

பனைக்கன்றுகளை ஊன்றும் நிலம் என்பது காடுகளை வெட்டி அல்லது விவசாய நிலத்தை மாற்றி பயன்படுத்துவதாக நாங்கள் திட்டமிடவில்லை என்றார் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர். 

55 சதவீத பாமாயிலை சமையல் எண்ணெய் தேவைக்காக இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. கடுகு, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் இருந்தாலும் கூட அதன் உற்பத்தி பெருகி வரும் தேவைக்கு ஏற்றபடி இல்லை. பாமாயில் உற்பத்திய தேசிய திட்டமாக கொண்டு வருவதன் மூலம் இந்தியா தன்னிறவை அடையும் வாய்ப்பு உள்ளது என்றார் தோமர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 35 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பனைக்கன்றுகளை ஊன்றி பாமாயிலை உற்பத்திசெய்துள்ளனர். 1500 ஹெக்டர்களுக்கு மேலான நிலத்தில் விவசாயம் நடந்து வந்தது. தற்போது நீதிமன்ற தீர்ப்பால் பனைக்கன்று விவசாயம் நிறுத்தப்பட்டுள்ளது. 

நிக்கோபார் பகுதியில் அதிக மழைவளம் உண்டு என்பதால் தண்ணீருக்கு பிரச்னையில்லை. எனவே இங்கு எளிதாக பாமாயில் உற்பத்தி செய்யமுடிகிறது. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமே 90 சதவீத பனைக்கன்றுகளை ஊன்றி விவசாயம் செய்துவருகின்றனர். நான்கு அல்லது ஏழு ஆண்டுகளில் பனைக்கன்றுகள் பலன் தரத் தொடங்கும். அதுவரை கன்றுகளுக்கு இடையில் வேறு பயிர்களை ஊன்றி அதனை விற்று சமாளிக்க முடியும். எப்படி சொன்னாலும் பனைக் கன்றுகளை வாங்கி ஊன்றி பராமரிக்க அதிக முதலீடு தேவைப்படுகிறது. பெரு நிறுவனங்கள், அரசு மானியம் மட்டுமே இதனை இந்தியாவில் வெற்றி பெற வைக்கும். 

நிக்கோபார் தீவுகளின்  சூழலியல் அதிகாரி, 2002இல் விவசாயத்துறைக்கு பாமாயில் உற்பத்தி, அங்குள்ள இயற்கை வளத்தை பாதிப்பதாக கடிதம் எழுதினார். பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அங்கு பனைக்கன்றுகள் விவசாயம் நிறுத்தப்பட்டது. இலங்கையில் இயற்கை வளத்திற்கு ஆபத்து என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டதால் பாமாயில் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

இப்படியெல்லாம் செய்திகள் வந்தாலும் கேரளத்தில் ரப்பர் தோட்ட முதலாளிகள், அதனை அகற்றிவிட்டு பனைக்கன்றுகளை ஊன்ற தயாராக இருக்கிறார்கள்.  பாமாயிலை இறக்குமதி செய்வதற்கான சுங்கவரியை எப்போது ஒன்றிய அரசு குறைத்ததோ அப்போதே உள்நாட்டு எண்ணெய் வித்துக்களுக்கான சந்தை குலைந்துபோய் விட்டது. பாமாயிலை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வெளிநாடுகள் நிறைய மானியங்களை வழங்குகின்றன என்றார் விவசாய ஆராய்ச்சியாளர் ராம் ஆஞ்சநேயலு. 















மூலம்

https://www.thehindu.com/news/national/oil-palm-plan-for-northeast-andamans-a-recipe-for-disaster-say-activists/article36165229.ece?utm_source=dailydigestTH&utm_medium=email&utm_campaign=Newsletter&pnespid=0fU1_PYHCVyNaXRxuAaxskfc40vQ0NvycHp2cpU

கருத்துகள்