லைபீரியா அரசுக்கு உதவிய ஒடிஷா டெக் இளைஞர்! - நியூஸ் ஜங்ஷன்
நியூஸ் ஜங்ஷன்
11.8.2021
புதன் கிழமை
ஆஹா!
கிரிப்டோகரன்சி ஆட்டோ!
இந்தியாவில் உள்ள ஆட்டோ க்காரர், கிரிப்டோகரன்சியில் பயணக்கட்டணத்தை செலுத்தலாம் என எழுதி வைத்து இணையத்தில் வைரலாகி வருகிறார். இப்புகைப்படம் எந்த நகரத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும், கிரிப்டோகரன்சியை ஏற்கும் முதல் ஆட்டோக்காரர் இவர்தான் என்ற புகழை முகம்தெரியாத ஆட்டோக்கார ர் பெற்றுவிட்டார். உலகளவில் தொழிலதிபர் எலன் மஸ்க் கிரிப்டோகரன்சியை ஏற்றுள்ளார். இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை என்றாலும், பல்வேறு நிறுவனங்கள் டிஜிட்டல் கரன்சி வணிகத்தில் மெல்ல இறங்கி வருகின்றன.
https://www.indiatimes.com/trending/social-relevance/auto-rickshaw-accepts-payments-in-cryptocurrency-goes-viral-546942.html
யுவான்ஜியாங் ஆற்றுப்பகுதியில் பாலத்தைக் கூட்டமாக கடந்துசெல்லும் ஆசிய யானைகள்!
இடம் யுன்னான், சீனா
https://www.reuters.com/news/picture/top-photos-of-the-day-idUSRTXFFSQQ
அங்கீகாரம்
சைபர் சக்கரவர்த்தி!
ஒடிஷாவின் புல்பானி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர், சௌம்யா ரஞ்சன் சாஹூ. இவர், ஆப்பிரிக்க நாடான லைபீரியா அரசின் நிதித்துறை இணையதளத்தை அச்சுறுத்திய சைபர் குற்றவாளியை பிடித்து சாதனை செய்துள்ளார். இதற்கான அந்நாட்டு அரசு, வாழ்த்து சான்றிதழோடு பணப்பரிசையும், வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது. பதினைந்து வயதான சாஹூ நான்கு ஆண்டுகளாக இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
https://www.newindianexpress.com/good-news/2021/aug/11/ethical-hacker-odia-boy-earns-praise-from-liberian-government-2343171.html
அப்படியா!?
மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம்!
டில்லியைச் சேர்ந்த மின் வாகனத் தயாரிப்பு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வாகனத்தை தயாரித்துள்ளது. கேஎல்பி கோமாகி என்ற நிறுவனம் முப்பது ஆண்டுகளாக மின்வாகனங்களை தயாரித்து வருகிறது. நான்கு மணி நேரம் சார்ஜ் ஏற்றினால், 90 கி.மீ. தூரம் செல்ல முடியும். இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகம் 25 கி.மீ. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அம்சங்களாக தானியங்கி முறையில் சரிசெய்துகொள்வது, வண்டியின் எடையை சமநிலைப்படுத்துவது என பல்வேறு வசதிகளை இந்த வாகனம் கொண்டுள்ளது
https://www.thebetterindia.com/260276/komaki-e-scooter-specs-ev-persons-with-disabilities-elderly/
அச்சச்சோ!
உளவாளிக்கு சிறை!
கனடாவைப் பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவர். இவர் , சீனாவில் பணியாற்றி வந்தார். இவர் மீது வெளிநாடுகளுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டை சீன அரசு சுமத்தி, தற்போது 11 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது. இதற்கு கனடா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஹூவெய் நிறுவனத்தின் இயக்குநர் மெங் வான்சூ கனடா நாட்டில் கைதானபோது, சீனாவில் மைக்கேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வணிக செயல்பாட்டிற்காக வடகொரியா சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
https://edition.cnn.com/2021/08/10/china/michael-spavor-verdict-intl-hnk/index.html
ஓஹோ!
Artificial Intelligence may diagnose dementia in a day
Scientists are testing an artificial-intelligence system thought to be capable of diagnosing dementia after a single brain scan.It may also be able to predict whether the condition will remain stable for many years, slowly deteriorate or need immediate treatment.Currently, it can take several scans and tests to diagnose dementia.The researchers involved say earlier diagnoses with their system could greatly improve patient outcomes.
https://www.bbc.com/news/health-57934589
கருத்துகள்
கருத்துரையிடுக