பெண்களின் உரிமைக்காக பாடுபட்ட பெண் செயல்பாட்டாளர்கள்!
மாற்றங்களை ஏற்படுத்திய பெண்கள்
இளவரசி இசபெல் - பிரேசில்
இரண்டாம் பெட்ரோ மன்னரின் மகள்தான் இசபெல். தந்தை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது இசபெல், தங்க சட்டம் என்பதை கொண்டு வந்தார். இதன்மூலம் பிரேசில் நாட்டில் அடிமை முறையை ஒழித்தார். இது அடிமை வியாபாரிகளையும், செல்வந்தர்களையும் கோபப்படுத்தியது. இதனால் இவர்கள் ஒன்றாக சேர்ந்த அரச குடும்பத்தை ஆட்சியிலிருந்து அகற்றும் கலகத்தை தொடங்கினர்.
கலகம் தொடங்கியதால் பிரான்சிற்கு சென்ற இளவரசி இசபெல், தனது 30 ஆண்டுகளை வெளிநாட்டில் செலவழித்தார்.
ஹெலன் கெல்லர்
பார்வை, பேச்சுத்திறன், செவித்திறன் இல்லாதவர். பிரெய்லி முறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற சாதனையாளர். சைகை முறையில் பிறருடன் உரையாடினார். பிரெய்லி முறையில் பனிரெண்டு நூல்களை எழுதியுள்ளார். ஹெலன் கெல்லர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
ரேச்சல் கார்சன்
இன்றைய சூழலியல் போராட்டங்களுக்கான முன்னோடி. கடல் சார்ந்த உயிரியல் ஆராய்ச்சிகளை திறம்பட செய்தவர். 1962ஆம் ஆண்டு சைலன்ட் ஸ்பிரிங் என்ற நூலை எழுதினார். இதில் டிடிடி எனும் வேதிப்பொருள் எப்படி பறவைகளை அழித்து மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்குகிறது என்பதை விவரித்திருந்தார். இவரின் நூல் வெளியான பிறகுதான், அமெரிக்க மருந்து நிறுவனங்கள் எப்படி சூழலை கெடுத்தன என்பதை அறிவியலாளர்களும், மக்களும் உணர்ந்து விழித்தனர். ரேச்சல் கார்சன் புற்றுநோயால் இறந்துபோனபிறகு 1964ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சூழல் பாதுகாப்பிற்கென தனி அமைப்பை உருவாக்கி டிடிடி மருந்திற்கு தடை விதித்தது.
வங்காரி மாத்தாய்
1977ஆம் ஆண்டு வங்காரி மாத்தாய் கென்யாவில் க்ரீன் பெல்ட் இயக்கத்தை தொடங்கினார். இந்த அமைப்பு மரங்களை நடுவதோடு பெண்களின் உரிமை பற்றியும் பேசியது. பெண்களுக்கான சூழலை மேம்படுத்துவதோடு சூழலியலையும் மேம்படுத்தியதே இவரது சாதனை. வங்காரி மாத்தாய் தனது செயல்பாடுகளுக்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதுவும் தனது செயல்களுக்கான கௌரவம் என்று எடுத்துக்கொண்டவருக்கு நோபல் அமைதி பரிசு கிடைத்தது. முதல் ஆப்பிரிக்க பெண்ணாக விருது பெற்றவர் இவர்தான்.
மார்க்கரேட் சான்
பறவைக் காய்ச்சல், சார்ஸ் ஆகிய நோய்த்தொற்று தெற்காசியாவை தாக்கியபோது ஹாங்காங்கின் சுகாதாரத்துறை இயக்குநர் சான்தான். எதிர்ப்புகளையும் மீறி 1.5 மில்லியன் கோழிகளைக் கொன்றார். இதனால் பெருமளவு மக்கள் பலியாகாமல் பிழைத்தனர்.
எம்மெலின் பான்ஹர்ஸ்ட்
பெண்களுக்கான செயல்பாட்டாளர்
1858ஆம் ஆண்டு எம்மெலின் கௌல்டன் அரசியல் செயல்பாட்டாளர்கள் உள்ள குடும்பத்தில் பிறந்தார். ரிச்சர்ட் பான்ஹர்ஸ்ட் என்ற பெண்ணுரிமைக்கு பாடுபடுபவரை கணவராக தேர்ந்தெடுத்தார். பெண்களின் வாக்குரிமைக்கான இயக்கத்தை பின்னாளில் உருவாக்கினார்.
இந்த இயக்கத்தைச் சேர்ந்த பெண்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அங்கும் கூட உண்ணாநோன்பு போராட்டத்தை நடத்தினார்கள். இவர்களை கட்டாயப்படுத்தி அரசு சாப்பிட வைத்தது அன்றைய நாளிதழ்கள் கார்ட்டூன்களாக வெளியிட்டன.
எம்மெலின் தனது தனது மூன்று பெண்களையும் கிரிஸ்டபெல், சில்வியா, அடிலா வாக்குரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட வைத்தார்.
1914ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்கியதும், எம்மெலின் தனது போராட்டத்தினை மாற்றிக்கொண்டார். ஆண்கள் வேலை செய்த தொழிற்சாலை, பண்ணை வேலைகளை பெண்கள் செய்யவேண்டும் என பிரசாரம் செய்தார். இதனால் ஆண்கள் போர்முனையில் போராட முடிந்தது.
எம்மெலின் இயக்கத்தின் போராட்டங்களால் 30 வயது கடந்த பெண்களுக்கு முதலில் வாக்குரிமை வழங்கப்பட்டது. பின்னர், 1928ஆம் ஆண்டு எம்மெலின் மறைந்த பிறகு, ஆண்களுக்கான வாக்குரிமையைப் போலவே பெண்களுக்கும் உரிமை கிடைத்தது. 21 வயது கடந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என சட்டம் மேம்படுத்தப்பட்டது.
1987ஆம் ஆண்டு எம்மெலின் வீடு பெண்களுக்கான ஆலோசனை மைய
மாக மாற்றப்பட்டது. இங்கு பெண்கள் தங்களுக்கான உரிமைகளைப் பற்றி அறிந்துகொண்டு வேலை செய்ய அனுமதிக்கப்பட்டது.
இவரது போராட்டங்களால் பெண்களுக்கு சம்பளமும், பிற உரிமைகளும் கிடைத்தன. பெண்கள் தங்கள் சுதந்திரத்தை மெல்ல அனுபவிக்கத் தொடங்கினர்.
ரோசா லக்சம்பர்க்
1870ஆம் ஆண்டு போலந்தில் ரோசா பிறந்தார். இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். சோசலிசம்தான் உலகை காக்கும் என்பதை நம்பினார். அனைவருக்குமான சம வாய்ப்பு என்பதை உறுதியாக நம்பி இயங்கி அரசு மூலம் கொலை செய்யப்பட்டார். ஐரோப்பா முழுக்க சுற்றி தொழிலாளர்களை ஊக்கப்படுத்தினார். இவரது கட்சிப் பெயர் ஸ்பார்ட்டகஸ் லீக்.
போருக்குப் பிறகு ரோசாவில் போராட்டத்தால் நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கிளம்பிவிடுவார்களோ என அதிகார வர்க்கம் பயந்தது. இதனால் கடுமையான முடிவை எடுத்தது. 1919ஆம் ஆண்டு ரோசாவை காவல்துறை கைது செய்து சித்திரவதை செய்து கொன்றது. எந்த குற்றச்சாட்டும் விசாரணையும் இல்லாமல் ரோசாவில் உயிர் பறிபோனது.
சோபி ஸ்கால்
மாணவ போராட்டக்காரர்
1921ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர் சோபி. இவருடைய சிறுவயதில் சகோதர ர் ஹான், சோபி இருவருமே ஹிட்லரின் இளைஞர் அமைப்பில் சேர்ந்தனர். ஆனால் அதில் பிற மனிதர்களுக்கு எதிரான வெறுப்பைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொண்டனர்.
இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ், கூட்டணிப்படையை எதிர்த்து ஜெர்மனி போரிட்டது. அந்த சமயத்தில் வெள்ளை ரோஜா என்ற இயக்கத்தை தொடங்கினார். மாணவர்களின் அகிம்சை இயக்கமான இது. நோட்டீஸ்களை பிரசுரித்து விநியோகிக்கவும், கிராபிட்டி ஓவியங்கள் மூலம் நாஜிக்களின் தவறுகளை வெளிப்படுத்தவும் முயன்றது.
ஸ்கால்,ஹான், கிறிஸ்டோப் என மூன்று மாணவர்களை அரசு, ஹிட்லருக்கு எதிராகப் பேசிய வழக்கில் கைது செய்து முறைப்படி அவர்களுக்கு சாதகமாக விசாரித்து மரணதண்டனை வழங்கியது. அதுவும் அடுத்த நாளே…. ஸ்கால் தனது தண்டனையை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்தார் என அவரை பார்த்தவர்கள் கூறினர். இறந்து பல்லாண்டுகள் ஆனாலும் அரசுக்கு எதிரான போராட்டம், துணிச்சல் ஆகியவற்றுக்கு அடையாளமாக சோபி இருக்கிறார். ஜெர்மனியில் மட்டுமன்றி, உலக நாடுகளிலும் கூட இவர் பிரபலம்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக