இடுகைகள்

ஏ.சண்முகானந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வான்வெளி பறவைகளே, சுதந்திரமாக பறந்து செல்லுங்கள்!

படம்
  வினோத் அண்ணனின் வீட்டில் கிடைத்த கையேடு. ஈஷாவின் பசுமைக்கரங்கள் அமைப்பு, கையேடு தயாரிப்பில் பங்களித்துள்ளது. இதை இரவல் வாங்கி மாணவர் இதழில் தொடரைத் தொடங்கினோம். இதன் வடிவம் இப்படி இருக்கலாம் என தலைமை வடிவமைப்பாளர்  ஐடியாக்களை சொன்னார். எளிமையாக புரியும்படி இருக்கவே சரி என அதற்கேற்ப பேசி தீர்மானித்து எழுத தொடங்கினோம்.  பறவைகள் பற்றிய தொடரில் பிரச்னை என்னவெனில் அதை எழுதுபவர்கள் மட்டுமல்ல தலைமை உதவி ஆசிரியராக உள்ளவருக்கும் அடிப்படையான அறிவு அவசியம். மாணவர் இதழில் அப்போது அப்பதவியில் இருந்தவர் கையாலாகாதவர். தாய் இதழில் அரசியல் கிசுகிசுக்களை எழுதி வந்த டவுசர் கூடார ஆள். தொடரை எழுதி முடித்தால் போதாது என அதை அவர் அருகில் நின்று வைவா கொடுக்கும்படி ஆயிற்று. தலைமை வடிவமைப்பாளர் அலுவலகத்தில் தினமும் சண்டை நடந்தால் நன்றாக இருக்கும் என வெளிப்படையாகவே கூறியவர். தன்னைத்தானே மாணவர் இதழ் ஆசிரியர் என நினைத்து அதிகாரம் செய்யத் தொடங்கினார். இவரும் டவுசர் பாயும் நண்பர்களானார்கள்.  பறவைகளைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை கவனிக்க வைக்கவேண்டுமென தொடங்கிய முயற்சியை, மேற்சொன்ன ...

வலசைப் பறவைகளைப் பற்றி அறிய உதவும் ஆய்வு நூல்! - ஏ.சண்முகானந்தம்

படம்
  வலசை செல்லும் பறவைகளின்  வாழ்விடச்சிக்கல்கள் ஏ.சண்முகானந்தம் பாரதி புத்தகாலயம் 160 காடு, உயிர் ஆகிய இயற்கை சார்ந்த மாத இதழ்களை நடத்திய, நடத்தி வரும் ஏ.சண்முகானந்தம் எழுதிய நூல் இது.   நூலில் பல்வேறு பறவைகள், அதன் சரணாலயங்கள், ஏரிகள், சதுப்புநிலங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. பறவைகள் பற்றிய ஆதி முதல் அந்தம் வரையிலான நிறைய தகவல்கள் உள்ளன. நூல்களை இன்னும் அறிவியல் தகவல்களை சேர்த்து மேம்படுத்தியிருக்கலாம் என்பதை  வாசிக்கும் போது யாவரும் உணர முடியும்.  வலசை செல்லும் பறவைகளைப் பற்றிய தகவல்களை ஆராய்ச்சி செய்பவர்களை இந்த நூலை வாங்கிப் படித்தால் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் தகவல்களை ஆசிரியர் கூறிய இடங்களுக்கு சென்று கூட தெரிந்துகொள்ளலாம்.  வலசை என்றால் என்ன, எதற்காக பறவைகள் வலசை செல்கின்றன என்பதுபோன்ற தகவல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஏ.சண்முகானந்தம் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை பிறர் எளிதாக புரிந்துகொள்வது கடினம். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருபவர், அதற்கான மொழியில் நூலை எழுதியிருக்கிறார். பயப்படவேண்டியதில்லை. அடிப்படையாக என்ன தெரிந்து...