இடுகைகள்

ரொக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் பாகுபாடுகளால் பாதிக்கப்படும் ஏழை, வயதான மக்கள்!

படம்
  இப்போது நீங்கள் படிக்கும் கட்டுரை டிஜிட்டல் உலகில் ஏழைகள், கல்வியறிவற்றவர்கள் படும்பாடுகளைப் பற்றியது. அண்மையில் திருவண்ணாமலை சென்றிருந்தபோது, அனைத்து கடைகளிலும் க்யூஆர் கோட் முதன்மையாக இருந்தது. கிரிவலப்பாதையில் தள்ளுவண்டி கடை ஒன்றில் சாப்பிட்டு 30 ரூபாயைக் கொடுத்தபோது, 24 ரூபாய் போக , ஆறு ரூபாய்க்கு பதில் ஐந்து ரூபாய்தான் கிடைத்தது. ஒரு ரூபாய்தான் நஷ்டம். ஆனால் அது உணவக உரிமையாளருக்கு அல்ல எனக்கு நேரிட்டது. க்யூ ஆர் கோடு வழியாக பணத்தை கட்டுவது எளிதானது. ஆனால் அதற்கு கட்டணம் விதிக்கும்போது நிலைமை என்னாகும்? வலுக்கட்டாயமாக ரொக்க பரிமாற்றத்தை ஒழிக்க உலகமெங்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. திருவண்ணாமலையில் எனக்கு டீ வாங்கிக்கொடுத்து அவரது அலுவலக அறையில் தங்க வைத்தவர், செய்த செலவுகள் அனைத்தும் க்யூஆர் கோட் வழியாகத்தான். நான் பணமாகவே எடுத்து அனைத்து செலவுகளையும் செய்தேன். நண்பர் தனக்கு நன்கறிந்த குறிப்பிட்ட ஆவின் பார்லர் கடையில் டீ அருந்துகிறார். சீனிவாசா உணவகத்தில் பட்டை சாதம் சாப்பிடுகிறார்.   எனவே, டிஜிட்டலில் பணம் செலுத்துவதில் பிரச்னை இல்லை. ஆனால், எனக்கு அதெல்லாமே அந்நிய இடங்கள்தா

ரொக்கப் பரிவர்த்தனைதான் அல்டிமேட்! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
ரொக்கமாக பணத்தை கையாள்வது இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நூறு சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில் அதன் அளவு 89 சதவீதமாக குறைந்துள்ளது. முழுமையாக க்யூஆர் கோடை பதிவு செய்து பொருட்களை வாங்குவது கடினமான ஒன்றுதான். நகரத்தில் பலரும் இதனை இப்போதுதான் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் இதனை தேர்ந்தெடுப்பதாக தெரியவில்லை.  பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் என்ற நிறுவனம், பணம் அச்சிடப்படுவது பெரிதாக குறையவில்லை என்று தகவல் கொடுத்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை பரிமாறுவது குறைகிறது என பலரும் கூறும் சூழ்நிலையில் கூட ரொக்கப்பணத்திற்கான மதிப்பு குறையவே  இல்லை. இதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.   அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக பரிமாறுவது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.  2020ஆம் ஆண்டு 26 சதவீதத்திலிருந்து ரொக்கப் பரிவர்த்தனை 19 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அமெரிக்க வங்கி எடுத்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.  ஸ்வீடனில் உண்மையில் ஒரு சதவீத ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்துள்ளது. உலக நாடுகளிலேயே இதுதான் மிகவும் குறைவான ரொக்கப்பரிவர்த்தனை.  ஜப்பானில் 21 சதவீத ரொக்கப