இடுகைகள்

சிவப்பு அணுக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - மனித உடல்

படம்
  படம் - ஜாக்சன் டேவிட் தெரிஞ்சுக்கோ – மனித உடல் மனித உடலிலுள்ள எலும்புகள் அதிகமுள்ள இரண்டு பகுதி கைகளும், கால்களும் ஆகும். கால்களில் 26, கைகளில் 27 எலும்புகள் உள்ளன. உடலிலுள்ள ரத்த நாளங்களை   விரித்தால் ஒரு லட்சம் கி.மீ. தூரம் வரும். தாடையிலுள்ள தசையான மசெட்டர், உடலில் மிக வலிமையான தசையாகும். இதன் கடிக்கும் வேகம் 91 கி.கிக்கும் அதிகம். ஒருநாளைக்கு, 1.5 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கிறது. இரண்டு நுரையீரல்களிலும் 300 மில்லியன் காற்றுப் புரைகள் உள்ளன. இந்த காற்று புரைகளுக்கு அல்வெயோலி என்று பெயர்.   மனிதர்களின் மூக்கால் இருபதாயிரம் வாசனைகளை வேறுபடுத்தி அறியலாம். கண்களிலுள்ள ரெட்டினாவில் 130 ஒளி உணர்வு செல்கள் உள்ளன. இதனால்தான் மனிதர்களால் வண்ணங்களை எளிதாக காண முடிகிறது. மனிதர்கள் தங்களது வாழ்நாளில் கண்களை தோராயமாக 415 மில்லியன் முறை சிமிட்டுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நாக்கிலுள்ள பழைய சுவைமொட்டுகள் நீக்கப்பட்டு, புதியவை வளருகின்றன. குழந்தைகளுக்கு நாக்கிலுள்ள சுவை மொட்டுகளின எண்ணிக்கை பத்தாயிரம், ஆனால் பெரியவர்களுக்கு ஆறாயிரம் மட்டுமே உள்ளது.

சிறுநீரக அமைப்பு எப்படி செயல்படுகிறது? - அறியாத புதிய தகவல்கள்

படம்
            சிறுநீர் அமைப்பு எப்படி செயல்படுகிறது ? உடலில் அறுபது சதவீதம் நீர் உள்ளது . அப்படி நீர் இருப்பதுதான் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது . ரீனல் அமைப்புதான் உடலில் உள்ள நீரின் தன்மையைக் கட்டுப்படுத்தி தேவையில்லாத கழிவுகளை சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது . இந்த அமைப்புதான் சரியான அளவில் சிறுநீரை வெளியேற்றி உடலிலுள்ள நீரின் அளவை கண்காணிக்கிறது . இதில் பாதிப்பு ஏற்படும்போது மனிதர்களுக்கு கழிவுநீர் ரத்தத்தில் கலக்கும் ஆபத்து உள்ளது . சிறுநீர்ப்பையில்தான் பெரும்பாலான கழிவுநீர் தேக்கப்பட்டிருக்கும் . இதன் கொள்ளளவு எட்டும்போது சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் தோன்றும் . இதன் வேகம் அதிகரிக்கும்போதுதான் முட்டுச்சந்து என்றால் உடனே ஜிப்பை இறக்கி ஆக்ரோஷத்தை தணிக்கிறோம் . சிறுநீரகத்தில் நெப்ரான்கள் உள்ளன . இவற்றில் உள்ள ஃபில்டர்தான் , குளோமெருலஸ் . இதில் ரத்த நாளங்களின் வலையமைப்பு உள்ளது . இவற்றில் உள்ள சுவர் போன்ற அமைப்பு , கழிவுகளை வடிகட்டுகிறது . இப்படி வடிகட்டிய நீர் ட்யூபில் என்ற இடத்திற்கு செல்கிறது . சோடியம் , பொட்டாசியம் , புரதம் ஆகியவை உறிஞ்சப்பட்டு கழிவ