இடுகைகள்

நீர்ச்சுருக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காபி குடித்தால் உடலில் நீர்ச்சுருக்கம் ஏற்படுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி  டீ, காபி குடித்தால் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறுமா? சேட்டன் கடை டீ குடித்தாலும் சரி, சாய் கிங்ஸில் போய் டெட்ரா பேக்கில் டீ வாங்கி எலைட்டாக குடித்தாலும் சரி. அதைக்குடித்த சிறிது நேரத்தில் மடியிலிருந்து கனம் இறங்குவதைப் போலத் தோன்றும். தனித்தமிழில் சிறிது நேரம் காத்திருங்கள் தோழா. சிறுநீர் சிந்திவிட்டு வருகிறேன் என்று செல்லவேண்டி வரும். காரணம். அதிலுள்ள காஃபீன். இதனால்தான் உயர்தர சுவையில் கோத்தாஸ் காபி, லியோ காபி குடித்தாலும் மூத்திரம் பிய்த்துக்கொண்டு போகிறது. எனவே டீ குடியுங்கள். கூடவே அம்மா குடிநீரையும் குடியுங்கள். விரைவில் உங்களுக்கே தெரிந்துவிடும் எது சிறந்தது என்று. நன்றி - பிபிசி

தினசரி எக்சர்சைஸ் செய்ய மலைப்பாக இருக்கிறதா?

படம்
டாக்டர் எக்ஸ் திடீரென வார் படம் பார்த்து காலித், கபீர் போல உடம்பை ஏற்றுகிறேன். ஹிரித்திக் ரோஷனுக்கு சர்வதேச அளவில் டஃப் கொடுக்கிறேன் என நினைப்போம். அது மனப்பிராந்தி என்பது கேட் தாழ்ப்பாளை விலக்க அம்மாவை கூப்பிடும்போதே தெரிந்துவிடும். ஒருநாள் எக்சர்சைஸ் ஒன்பது நாள் ரெஸ்ட் என்பதுதான் நமக்கான விதி. ஏன் இப்படி நடக்கிறது என யோசித்திருக்கிறீர்களா? உடம்பில் சரியான அளவு நீர்ச்சத்து இல்லை. எலக்ட்ரோலைட்ஸ் இல்லை என ஓசோன் தண்ணீர் பாட்டில் விற்கிற கதைக்கு ஆதாரம் கிடையாது. என்ன செய்யலாம்? நடைமுறையில் வலிக்கும் தசைக்கு மெல்ல கைகளால் நீவி ஒத்தடம் போல கொடுத்தீர்கள் என்றால் அன்றும் சுகம் கிடைக்கும். அடுத்தநாள் வலியை நினைக்காமல் தொப்பை குறைய வாக்கிங் செல்லவும் முடியும். வாக்கிங்தான் போவீர்கள். ஆனால் உடலில் வயிறு, மார்பு, கால்கள் என சில இடங்களில் கடும் எரிச்சல் உருவாகும். இதற்கு காரணம் ரத்த ஓட்ட மாறுபாடுகள்தான். இதனால் உடல் கொடுக்கும் சிக்னலை அப்படியே ஏற்று மூளை கொடுக்கும் அலார எச்சரிக்கைத்தான் எரிச்சல். இதோடு நிறுத்திக்க என்று அதனை நினைக்கத் தேவையில்லை. கவனமாக நிதானமாக பயிற்சிகளைச் செய்தால