தினசரி எக்சர்சைஸ் செய்ய மலைப்பாக இருக்கிறதா?
டாக்டர் எக்ஸ்
திடீரென வார் படம் பார்த்து காலித், கபீர் போல உடம்பை ஏற்றுகிறேன். ஹிரித்திக் ரோஷனுக்கு சர்வதேச அளவில் டஃப் கொடுக்கிறேன் என நினைப்போம். அது மனப்பிராந்தி என்பது கேட் தாழ்ப்பாளை விலக்க அம்மாவை கூப்பிடும்போதே தெரிந்துவிடும். ஒருநாள் எக்சர்சைஸ் ஒன்பது நாள் ரெஸ்ட் என்பதுதான் நமக்கான விதி. ஏன் இப்படி நடக்கிறது என யோசித்திருக்கிறீர்களா?
உடம்பில் சரியான அளவு நீர்ச்சத்து இல்லை. எலக்ட்ரோலைட்ஸ் இல்லை என ஓசோன் தண்ணீர் பாட்டில் விற்கிற கதைக்கு ஆதாரம் கிடையாது. என்ன செய்யலாம்? நடைமுறையில் வலிக்கும் தசைக்கு மெல்ல கைகளால் நீவி ஒத்தடம் போல கொடுத்தீர்கள் என்றால் அன்றும் சுகம் கிடைக்கும். அடுத்தநாள் வலியை நினைக்காமல் தொப்பை குறைய வாக்கிங் செல்லவும் முடியும்.
வாக்கிங்தான் போவீர்கள். ஆனால் உடலில் வயிறு, மார்பு, கால்கள் என சில இடங்களில் கடும் எரிச்சல் உருவாகும். இதற்கு காரணம் ரத்த ஓட்ட மாறுபாடுகள்தான். இதனால் உடல் கொடுக்கும் சிக்னலை அப்படியே ஏற்று மூளை கொடுக்கும் அலார எச்சரிக்கைத்தான் எரிச்சல். இதோடு நிறுத்திக்க என்று அதனை நினைக்கத் தேவையில்லை. கவனமாக நிதானமாக பயிற்சிகளைச் செய்தால் இதுபோல அறிகுறிகள் வராது. மேலும் பயிற்சிகளின்போது வயிறு, நுரையீரல் ஆகிய பகுதிகளில் கடாமுடா என்பது போன்ற உலகப்போர் கால டாங்கிகள் வீழ்வது போல சத்தம் கேட்கும். அரண்டு விடாதீர்கள். ஒன்றும் ஆகாது.
ஷீக்களை அணிந்து ஓடுங்கள். அவை ஓடுவதற்கு ஊக்கம் கொடுக்கும். வெறுங்காலோ, பாரகன் அணிந்து ஓடுவது நல்லதல்ல. சுதேசி என யாராவது ஷேரிங் செய்திகளை அனுப்புவதைப் பார்த்து வெறுங்காலில் ஓடினால் காயமும், நோய்த்தொற்றுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். கபர்தார்.
நன்றி: க்யூரியாசிட்டி