இ சிகரெட்டுக்கு உலக நாடுகள் தடை விதிப்பது ஏன்?
இ சிகரெட்டைத் தடை செய்வது ஏன்?
அமெரிக்காவில் சாதாரண புகையிலையைக் கொண்ட இ சிகரெட்டுகளைத் தவிர பலவித வாசனைகளைக் கொண்ட இ சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
தயாரிப்பு, இறக்குமதி, விற்பனை ஆகிய அனைத்து செயற்பாடுகளையும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இன்றுவரை இருபது நாடுகளில் இ சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே ஆகிய நாடுகள் புகையிலை, இ சிகரெட்டுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை விதிகளை இயற்றி அமல்படுத்தியுள்ளன..
இ சிகரெட்டுகள் தொடர்ச்சியாக சிகரெட்டுகளை புகைப்பவர்களுக்கு, அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தரும் என்கிறார்கள். ஆனால் இ சிகரெட்டுகளில் 1500க்கு மேற்பட்ட வெரைட்டியான வகைகள் உண்டு என்பதால், இளைஞர்கள் நேரடியாக இதற்கு வந்துவிடுகின்றனர். அமெரிக்காவில் 12-17 வயதில் உள்ளவர்களில் 81 சதவீதம் பேர் புகைக்கின்றது ஆபத்தான சங்கதிதானே? எண்ணிக்கையில் 3.6 மில்லியன் குழந்தைகளை இதனை புகைக்கத் தொடங்கியுள்ளன்ர.
புகையிலையிலுள்ள நிகோட்டின் பாதிப்பை விட இ சிகரெட்டிலுள்ள வேதிப்பொருட்கள் இளைஞர்களை அதிகளவு பாதிக்கின்றன. இதனால் மரபான புகையிலையை விட இ சிகரெட்கள் அதிகம் சுவாசப்பாதையை உருக்குலைக்கின்றன. benzyl alcohol, benzaldehyde, vanillin ஆகிய வேதிப்பொருட்கள் ரத்த த்திலுள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டையும் முடக்குகின்றன. எனவேதான் புகையிலையைவிட இ சிகரெட் வேதிப்பொருட்கள் மிக கடுமையானவையாகவும், நுரையீரல் தொடர்பான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி - கான்வர்சேஷன்