வெற்றிக்கொள்கைகள் 25- நம்பிக்கை ஊற்றை பெருக வைக்கும் நூல்!



Image result for jack canfield




வெற்றிக்கொள்கைகள் 25

ஜாக் கேன் ஃபீல்டு

தமிழில் - நாகலட்சுமி சண்முகம்.


சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால் இதில் வெற்றியாளர்களின் கதைகள் நிறைந்துள்ளன. பொதுவாக வெற்றி, ஏதாவது செய்யுங்கள் என்று வம்படியாக பேசாமல், இதைச்செய்தால் இந்த விளைவு. நீங்கள் உங்கள் சூழலில் இதை செயல்படுத்திப் பாருங்கள் என்று ஜாக் சொல்வது புதுமை.

இருபத்தைந்து கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமா என மலைக்காதீர்கள். இதில் எதைக் கடைபிடித்தாலும் உங்களுக்கு அதற்கான விளைவுகள் கிடைக்கும். காரணம், இவர் காட்டும் உதாரணங்கள்.

இதில் நிறைய மேற்கத்திய உதாரணங்கள் இருப்பதால் முதலில் புரியாதது போல தோன்றலாம். ஆனால் நாகலட்சுமி சண்முகம் ஜாக் கேன் ஃபீல்டிடம் நேரடியாக பயிற்சி  பெற்றவர் என்பதால், நிறைய விஷயங்களை பிரமாதமாக நமது குடும்ப உறுப்பினர் போல உரையாடலில் கூறுகிறார். அதுவும் நன்றாகவே இருக்கிறது.

வெறும் வார்த்தைகளில் எதைச்சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.இதனால் நூலிலுள்ள 285 பக்கங்களில் வெளி உதாரணங்களோடு தன் சொந்த அனுபவங்களையும் இணைத்தே பேசுகிறார். இதனால் கொள்கைகள் மீது படிக்கும் யாருக்கும் நம்பிக்கை பிறக்கும்.

பொதுவாக நூலை படித்தால் விற்பனையாளர்களுக்கான நூலாகத் தோன்றும். ஆனால் மனிதர்களோடு சேர்ந்து இயங்குபவர்களுக்கு, குழுவாக பணிபுரிபவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. படிக்கும்போது இதில் பொங்கும் உற்சாகம் உங்களை மாற்றும்.


கோமாளிமேடை டீம்