அபிஜித் கருத்து என்ன?
ஷங்கர் படத்தில் தொடங்கிய பழக்கம் இது. யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு கருத்து மனதில் இருக்கும். அதனைச் சொல்லியே ஆக வேண்டும் என வற்புறுத்துவது. விளைவு, படுமோசமாகத்தான் இருக்கும். கேள்வி கேட்டவருக்கு அல்ல, பதில் சொன்னவருக்கு.
இம்முறையில் அபிஜித்திடம் பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களை கேட்டுள்ளனர். இதில் அவர் என்ன நினைக்கிறார் என்பது படித்தால் உங்களுக்கே புரிந்துவிடும்.
பணமதிப்பு நீக்கம்!
இந்த நடவடிக்கையின் பின்னுள்ள லாஜிக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட வேண்டும்? இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது அதிகமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
தன்னைவிட கருப்புபணம் வைத்திருப்பவர்கள் அதிகம் கஷ்டப்படுவார்கள் என்று மக்கள் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் வெளியிட்ட பணத்தில் 97 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கே திரும்பிவிட்டது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். பணக்காரர்களுக்கு அல்லது கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்திருக்குமென்று....
பொருளாதாரரீதியில் அரசு செய்த முட்டாள்தனங்களில் ஒன்று பணமதிப்பு நீக்கம். உண்மையில் இந்த நடவடிக்கையில் ஏதேனும் பொருளாதார அக்கறை இருக்கின்றதா என்று கூட எனக்குத் தெரியவில்லை.
ஜிஎஸ்டி
இந்தியாவில் ஜிஎஸ்டியை அமல்படுத்திய முறை சரியில்லை என்பேன். கவனமான குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதனை செயல்படுத்தியிருப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.
தேசிய மாத வருமானத் திட்டம்
யுபிஐ எனும் வருமானத்திட்டம் நேரடியாக செயல்படுத்தப்பட்டால் நல்ல பயன்களை அளிக்கும் என நம்புகிறேன். பொது விநியோக முறைபோன்று சிறப்பான பயன்களை அளிக்கும் திட்டம்தான் இது.
நன்றி: டைம்ஸ்