இடுகைகள்

ஏ.ஐ. ஜோக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கணினிகளுக்கு ஜோக் சொல்ல கற்றுத்தருகின்றனர்!

படம்
கணினிகளுக்கு சிரிப்பைக் கற்றுத்தர முடியுமா? கூகுளின் கணினி சிக்கலான விளையாட்டுகளில் பல்வேறு திறன் வாய்ந்த வீர ர்களை வென்றது. பிற திறன் பெற்ற கணினிகள்,செஸ் விளையாண்டன. கவிதை பாடின. ஓவியங்களை வரைந்தன. இன்னும் பல்வேறு ஆய கலைகளிலும் தன் கால்களை பதித்தன. இத்தகவல்களை வைத்து விகடன் இதழில் தொடரே எழுதி பயமுறுத்தினர். ஆனால் அவை கற்காத முக்கியமான ஒன்று, சிரிப்பு. தான் கூறும் அல்லது தன்னிடம் கூறப்படும் வாக்கியங்களின் பொருளைப் புரிந்துகொண்டு அது என்ன என்று உள்வாங்கிக்கொள்ளும் திறனை செயற்கை நுண்ணறிவு இன்னும் கற்கவில்லை. எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கிரேசிம் ரிச்சியின் கணினியின் பெயர் சிரிப்பு கணினி. இக்கணினி, தினசரி ஓரு ஜோக்கை பர்வீன் யூனூஸ் போல ட்விட்டரில் பதிவிட்டு வருகிறது. இருப்பதிலேயே ஜோக்கை சிம்பிளாக சொல்லி புரியவைப்பதுதான் கடினம். அதனை ஏ.ஐ.க்கு சொல்லி, அதற்கு புரியவைத்து பிறரை சிரிக்க வைப்பது மிக கடினம். ”கணினிகள் ஜோக்கைப் புரிந்துகொள்வது ஒரு ரகம் என்றால், அவையே ஜோக்கை தயாரிப்பது மற்றொரு ரகம். இதற்கு நீங்கள் வழக்கம்போல  கணினிக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், இதற்