இடுகைகள்

இடது சாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரத்ததானம் செய்து கிடைத்த பணத்தில் எழுத தொடங்கிய எழுத்தாளர்! - மனோரஞ்சன் பியாபாரி

படம்
  மனோரஞ்சன் பியாபாரி எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியை எங்கு சந்தித்தீர்கள்? நான் அந்த சமயத்தில் வாழ்க்கைப் பிரச்னைகளை சமாளிக்க ரிக்ஷா வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். தெற்கு கொல்கத்தாவின் ஜாதவ்பூரில் தேவி அவர்களைச் சந்தித்தேன். வண்டி ஓட்டிக்கொண்டே அவரிடம் நான் ஜிஜூபிஷா என்றால் என்ன என்று கேட்டேன். ரிக்சா ஓட்டுபவர் இப்படியொரு வார்த்தைக்கு அர்த்தம் கேட்பார் என்று தேவி எதிர்பார்க்கவில்லை. நான் இதை எங்கு படித்தேன் என்று அவர் கேட்டார். நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன் என்றும் பள்ளிக்கு போனதில்லை என்றும் கூறினேன். உடனே அவர் என்னுடைய பத்திரிகையில் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.  அதற்கு அவர் ஏதாவது பணம் கொடுத்தாரா? பணமா? அதெல்லாம் இல்லை. நான் எழுதியது பர்திகா என்ற இதழில் வெளியானது. அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  இமானைப் படித்தபோது நீங்கள் எழுதவும் படிக்கவும் சிறையில் இருந்தபோது கற்றதாக கூறியிருந்தீர்கள். கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.  நான் சிறையில் இருந்தபோது பேனாவும் காகிதமும் கிடைக்கவில்லை. கிடைத்த விஷயங்களை வைத்து கிறுக்கிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த கைதிகளில் ஒருவர் எனக்கு ஆறுமாதம