இடுகைகள்

நந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவன் கோவிலை புனரமைக்கும் இரட்டைத் தலை நாகம் - நந்தி ரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
நந்தி ரகசியம்  இந்திரா சௌந்தர்ராஜன் மின்னூல்  இறைவனை நம்பினால் இன்னல் நீங்கும். அதற்கு மனித முயற்சியும் சிறிது தேவை என்பதை நூலாசிரியர் கூறுகிறார். கதையும், அதற்கான சம்பவங்களும் வலுவாக இல்லை என்பதே நாவலின் பெரும் பலவீனம்.  நாவலை படிப்பதை விட நூலில் உள்ள கோவில் அமைவிடம், ஏன் கோவில் குறிப்பிட்ட கன்னி மூலையில் அமைக்கப்படுகிறது என்ற தகவல்கள் துணுக்குகளாக வாசிக்க நன்றாக இருக்கின்றன.  ஊர் பெரிய மனிதர் உடையார். அவர் சிந்தாமணி என்ற பெண்ணை உடலுறவுக்கென காதலியாக சேர்த்துக்கொள்கிறார். இதனால் அவரை திருமணம் செய்த மனைவி திரௌபதி கணவனை விட்டு விலகுகிறாள். அதே ஊரில் தனது மனநிலை சரியில்லாத மகனுடன் தங்கியிருக்கிறாள். ஒருநாள் உடையார் இறந்துவிட, காதலி அழுதுக்கொண்டிருக்க ஊர் பெரியவர்களில் ஒருவர் உடையாருக்கு உரிய மனைவி என்பவள் திரௌபதிதான்.அவளைக் கூப்பிட்டால்தானே உடலுக்கான காரியங்களை செய்ய முடியும் என சொல்லுகிறார். இந்த நேரத்தில் சொத்து தொடர்பான வாக்குவாதம் தொடங்குகிறது. உடையாரின் வழக்குரைஞர் வாதிராஜ், அனைத்து சொத்துகளும் காதலியான சிந்தாமணிக்கு சொந்தம் என்று எழுதிய உயிலைக் காட்டுகிறார். கூடவே கட்டாந்தரையாக கிட