இடுகைகள்

4பி இயக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செக்ஸ், குழந்தை எதுவும் வேண்டாம் - தென்கொரியாவில் மாறும் நிலைமை

படம்
தென்கொரியாவில் 4 பி என்ற அமைப்பு புதிதாக உருவாகியுள்ளது. பெண்களுக்கான உரிமை கோரல்களுக்காக என்று நினைப்பீர்கள். அதற்காகவெல்லாம் கிடையாது. காதல், கல்யாணம், குழந்தை, குடும்பம் இதெல்லாம் வேண்டாம் என பிரசாரம் செய்யும் அமைப்பு அது. தொழில்நுட்பம் அங்கு சிறப்பாக இருந்தாலும் கலாசார மதிப்பில் அவர்களும் இந்தியர்களைப் போலத்தான். குடும்பம், திருமணம், குழந்தைகளைப் பராமரிப்பது, மாமியார் - மாமனார் இத்தியாதி என நீண்டுகொண்டே செல்லும் லிஸ்டுகளை மருமகள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது தென் கொரியர்கள் அதிலும் பெண்கள் இத்தனை பொறுப்புகளை நாங்கள் ஏற்கணுமா என கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.  “திருமண மார்க்கெட்டில் பெண்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. நன்றாக படித்த பெண்களுக்கு மைனஸ் மார்க்குகளை ஆண்கள் போடுகிறார்கள். அவர்களுக்கு தங்களையும், குழந்தைகளையும், அவர்களின் வயதான பெற்றோர்களையும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர். இதனால்தான் பெண்கள் தற்போது திருமணத்தை தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்” என்கிறார் போனி லீ என்ற பெண்மணி. 4 பி எனும் இந்த இயக்கத்தை தற்போது 4 ஆயிரம் பேர் பின்பற்றி வருகின்றனர்