இடுகைகள்

சூழலியல் - பிரான்ஸ் சைக்கிள் திட்டம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாடகை சைக்கிளுக்கு அரசு ஆதரவு!

படம்
வாடகை சைக்கிளுக்கு மாறுங்க! பிரான்சின் பாரிசில் the  Ile-de-France Mobilités   எனும் பொதுபோக்குவரத்து அமைப்பு அடுத்தாண்டு செப்டம்பரில் பத்தாயிரம் மின்பைக்குகளை நீண்டகால அடிப்படையில் வாடகைக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. வெளிகோ எனும் இத்திட்டம் விரைவில் 20 ஆயிரம் சைக்கிள்களாக விரிவுபடுத்தப்படவுள்ளது. “மின்பைக்குகளை பயன்படுத்துவது சூழலியலுக்கு ஆபத்து விளைவிக்காது என்பதோடு மாசுபாடும் குறையும். கார்களின் போக்குவரத்தை குறைப்பது எங்கள் முதல் பணி” என்கிறார் லெ டி ஃபிரான்ஸ் அமைப்பின் இயக்குநரான வாலெரி பாகிரிஸெ. பத்து மில்லியன் மக்கள் உள்ள நகரில் சைக்கிளை பயன்படுத்துபவர்களின் அளவு 1.6 சதவிகிதம் மட்டுமே. மாதம் 45 டாலர்கள் பணத்தை கட்டிவிட்டு மின்பைக்கை மக்கள் தம் வீட்டில் வைத்துக்கொள்ளும் வசதி இத்திட்டத்தில் புதுசு. இத்திட்டத்தை 127 மில்லியன் டாலர்கள் செலவில் ட்ரான்ஸ்டேவ் என்ற தபால் மற்றும் போக்குவரத்து நிறுவனம் செயல்படுத்தவிருக்கிறது.