இடுகைகள்

பயோ ஃப்யூல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயிரி எரிபொருள்(பயோ ஃப்யூல்) - காட்டிலுள்ள உயிரினங்களை அழிக்கும் எரிபொருளாக மாறிய கதை!

படம்
கரிம எரிபொருட்களுக்கு மாற்றாக நிறைய நாடுகள் உயிரி எரிபொருட்களை பரிந்துரைக்கின்றன. அப்படி மாறினால் சூழலுக்கு ஆபத்து ஏற்படாது என பரப்புரை செய்யப்படுகிறது. உண்மையில் அது தவறான வாதம். உயிரி எரிபொருட்களை விளைவதற்கு பயன்படுத்தும் உரங்களுக்கு அடிப்படையானதே கரிம எரிபொருட்கள்தான். அவை இல்லாமல் எப்படி உயிரி எரிபொருட்களுக்கு அடிப்படையான பயிர்களை விளைவிக்க முடியும்? உணவுப்பயிர்களை விளைவிப்பது குறைந்துவரும் சூழலில் ஒருவர், உயிரி எரிபொருட்களுக்கான பயிர்களை விளைவித்தால் அங்கு சூழல் என்னாகும்? விரைவில் நாடு உணவு தானியங்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் என்பதே நடைமுறை உண்மை. உயிரி எரிபொருட்களில் முக்கியமானது, பனை எண்ணெய். அதாவது பாமாயில். இதை எப்படி விளைவிக்கிறார்கள்? இந்தோனேஷியா, மலேசியா, கொலம்பியா ஆகிய நாடுகளில் மழைக்காடுகளை வெட்டி எறிந்துவிட்டு அங்கு பனைமரக்கன்றுகளை நட்டு பனை எண்ணெய்யை உற்பத்தி செய்கிறார்கள். உணவு பயிர்களுக்கு மாற்றாக பணப்பயிர்களை விளைவிப்பது, ஒருகட்டத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தைக் கொண்டு வரும். மேலும், அமெரிக்காவில் வாகனங்களுக்கு எரிபொருளாக சோளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன