இடுகைகள்

தோல்நோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலமிளக்கியால் தோல்நோய் தீராது!

படம்
   மருந்து = நஞ்சு ஓமியோபதி ஒவ்வாமைக்கான மருந்துகளாக தாய் திராவகம்(பத்து சொட்டுகள்), சிறிய இனிப்பு உருண்டைகள்(சாப்பிடும் முன்/பத்து உருண்டைகள்), சப்பி சாப்பிடும் மாத்திரைகள் ஆறு(மூன்று வேளைக்கு)சாப்பிட மருத்துவர் அறிவுறுத்தினார். இதில், சித்த மருத்துவம் போல பத்தியமும் உண்டு. சித்த மருத்துவத்தில் ஒவ்வாமை பிரச்னைக்கு இடையறாது மலமிளக்கி மருந்துகளை கொடுத்தனர். அடிப்படையில் தோல் நோய்களுக்கு மூல காரணம், மலம் குடலில் இருந்து வேகமாக வெளியேறாத காரணத்தால், அதிலுள்ள கிருமிகள் உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகின்றன. எனவே, மலமிளக்கி மருந்துகளை இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு ஓடவேண்டியிருந்தது. அப்படி ஓடாவிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எப்படி ஒருவித உணர்வு தோன்றுகிறது. அதேவித கழிந்துவிடும் உணர்வு மருந்தால் உருவாக்கப்பட்டது. இதேபோல ஓமியோபதியிலும் வெளிக்குப்போக மருந்துகள் உண்டு. ஆனால், அவை திருகலானவை. அவற்றைத் தின்றால் எதற்கு அதை தின்றோம் என யோசிக்கவைப்பவை. ஓமியோபதியில், மலமிளக்கி மருந்துகளை கொடுப்பதை சாமுவேல் எதிர்க்கிறார். நோயை என்...

கிரிக்கெட்டை விளையாடமுடியாத அளவுக்கு வெயில்!

படம்
  சார் வணக்கம். நலமா? கடும் வெயில். உடல் சூடு அதிகம். பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டை விளையாட முடியவில்லை. மழையில் ஒதுங்கினால் தேவலை என்பது போல வெயில் வாட்டுகிறது. நேற்று (ஞாயிறு) குடும்பமாக அக்கா வீட்டிற்குச் சென்றோம். அங்கேயே நாளைக் கழித்தோம். எங்கள் வீட்டிற்குத் திரும்பவில்லை. வீட்டில் கடும் புழுக்கம். என்னுடைய முதல் அக்கா வீடு காற்றோட்டமாக நன்றாக இருக்கும். தாய்மாமனுக்கே அக்காவைக் கொடுத்ததால் அவர்கள் வீட்டில் எங்களுக்கு உரிமை அதிகம். பனங்காய், தோண்டி கிடையில் அறுத்து சாப்பிட்டோம். குடும்பம் சூழ இருந்ததால் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி.   மாணவர் இதழ் பற்றி சொல்ல ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. டிசைனர் சீஃப் போனதில் இருந்து, அவரது குழுவினர் சிறப்பாக டிசைன் செய்கிறார்கள். புதுப்புது லோகோ வைத்து எனது பக்கத்தை மெருகேற்றுகிறார்கள். விரைவான லே அவுட் இனி நடக்கும் என நம்புகிறேன். கணபதி சார், இப்போதெல்லாம் என்னிடம் நிறைய பேசுகிறார். கொடுக்கு அந்தளவிற்கு கொட்டுவதில்லை. அவரது பெண்ணை நல்ல கல்லூரியில் சேர்க்க படாதபாடு படுகிறார். மாணவர் இதழ் எடிட்டரும் தாய் நாளிதழும் உதவி புரியவில்லை எ...