இடுகைகள்

வெளிநாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை! - அசுதோஷ் சர்மா

படம்
  அசுதோஷ் சர்மா, செயலர் - அறிவியல் தொழில்நுட்பம் வரைபடத்துறையை தாராளமயமாக்கியிருக்கிறீர்களே? பல்லாண்டுகளாக இத்துறை சீர்திருத்தங்கள் செய்யப்படாமல் இருந்தது. தற்போது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இத்துறையில் தாராளமயமாக்கும் திட்டம் செயலாக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ஏன்? நாங்கள் எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. மிகவும் துல்லியமான படங்களை பெற கட்டுப்பாடுகள் இருந்தன. இந்திய நிறுவனங்கள் இப்படி படங்களைப் பெற்று பயன்படுத்த உரிமங்களைப் பெறவேண்டும். இப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புவியியல் சார்ந்த பல்வேறு தகவல்களை நிறுவனங்கள் பெற்று பயன்படுத்த முடியும்.  இதன்மூலம் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை அவுட்சோர்ஸ் முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? உறுதியாக. இதற்கு இந்திய நிறுவனங்கள் ஆப்களை தயாரிக்கவேண்டும். அதன் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்ததாக இருப்பது அவசியம்.  மத்திய அரசு சட்டம் இயற்றினாலும் கூட நி

கடன் பத்திர வெளியீடு இந்திய அரசைக் காக்குமா?

படம்
flipboard.com  கடன் பத்திர வெளியீடு அரசைக் காக்குமா? இந்தியா, சரிந்துவரும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செலவுகளுக்கான நிதி திரட்டும் முயற்சியாக, இந்திய அரசு கடன் பத்திரங்களை ('Sovereign Bond') வெளியிட்டு வருகிறது. தற்போது புதிய நடவடிக்கையாக வெளிநாட்டினரும் இப்பத்திரங்களை வாங்க முடியும் என்ற அரசின் முடிவு, பொருளாதார வல்லுநர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அரசு தன் செலவுகளுக்கான நிதியை இருவழிகளில் பெறலாம். வரி மற்றும் பத்திரங்கள் வெளியீடு. வரியை உயர்த்துவது கடுமையான சட்டச்சிக்கல்களைக் கொண்டது. எனவே பல்வேறு நாடுகள் முதிர்வுகாலத்தைக் கொண்ட கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இதனை மக்கள் அல்லது நிறுவனங்கள் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அரசு, குறிப்பிட்ட முதிர்வுகாலத்தில் வட்டியுடன் கடன் பத்திரத் தொகையைத் திருப்பி தரவேண்டும். அரசு இப்பொறுப்பில் தவறினால், ரிசர்வ் வங்கி தொகையைத் திருப்பித் தரும்.  இதில் என்ன பிரச்னை? தன் செலவுகளுக்கான நிதி திரட்ட இந்திய அரசு உள்நாட்டுச்சந்தையில் பத்திரங்களை வெள