இடுகைகள்

நைட்ரஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிவேக வேளாண்மை விரிவாக்கத்தால் சிதைந்துபோன சூழல் சமநிலை!

படம்
  உரங்களால் கெட்டுப்போன சூழல் சமநிலை 1960ஆம் ஆண்டு அதிக விளைச்சல் தரும் விதமாக வேளாண்மை துறை மாற்றப்பட்டது. ஏனெனில் அதிகளவு மக்கள்தொகை உருவாகத் தொடங்கிய சூழல். இதனால் காடுகள் அழிக்ககப்பட்டு நன்னீர்நிலைகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படத் தொடங்கின. உணவு உற்பத்தி அதிகரித்தது உண்மை. அதேநேரம் வறுமை, உணவு வீணாவது, மக்களுக்கு இடையே பொருளாதார பாகுபாடு, வசதிகளைப் பெறுவதில் பெரும் இடைவெளி ஆகியவையும் ஏற்பட்டன. உலக நாடுகளில் பல கோடி மக்கள் பட்டினியாக கிடந்தனர். அடிப்படையான நுண் ஊட்டச்சத்து சிக்கலும் எழத் தொடங்கியது. உணவுக்கு கொடுத்த விலை எந்திரமயமாதலுக்கான முதலீடு, தொழிலாளர்கள், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவை காரணமாக வேளாண்மை துறை முன்னேற்றம் கண்டது. அதிக விளைச்சல் கொண்ட பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக இயற்கையில் சூழல் ரீதியான பின்விளைவுகள் உருவாயின.   மாசுபாடு, பல்லுயிர்த்தன்மை அழிவு, மண்ணின் வளம் அழிவது, ஒரேவிதமான பணப்பயிரை பயிரிடுவது, பண்ணை விலங்குகளின் நலனில் கவனக்குறைவு ஆகியவற்றை உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய உரங்களின் தேவை அதிகமா

லிக்விட் நானோ யூரியா- சாதாரண யூரியாவிற்கு மாற்று!

படம்
  இந்தியாவில் விரைவில் லிக்விட் நானோ யூரியா விற்பனைக்கு வரவிருக்கிறது இதனை குஜராத்தில் உள்ள கலோல் தொழிற்சாலை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனை கடந்த வாரம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்திய கூட்டுறவு விவசாயிகள் உரச்சங்க நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலை அரைலிட்டர் பாட்டில் 240 ரூபாய் வருகிறது. இதில் மானிய உதவி ஏதும் கிடையாது. சாதாரணமாக விவசாயிகள் வாங்கும் யூரியா 50 கிலோ 300க்கு விற்கிறார்கள். 300 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க அரசு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்கிறது.  உலகசந்தையில் ஒரு மூட்டை யூரியாவின் விலை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்கிறது. இதனை லிக்விட் நானோ யூரியா மாற்றும் என கருதப்படுகிறது.  யூரியா என்பதே நைட்ரஜன் சத்தை செடிகளுக்கு கொடுப்பதுதான். புதிய நானோ ரகத்தில் நைட்ரஜன் நானோ பார்டிக்கிள் வடிவில் இருக்கும். இதனை நேரடியாக செடி அல்லது பயிர் மீது தெளிக்க வேண்டியதுதான். சாதாரண யூரியாவின் செயல்திறன் 25 சதவீதம் என்றால் இதன் திறன் 85-90 சதவீதம் என்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை லிக்விட் நானோ யூரியா மூலம் இறக்குமதி குறையும் என நினைக்கிறது.  2 முதல்

மறைமுகமாக மாசுபாடுகளை ஊக்குவிக்கும் நைட்ரஜன்!

படம்
  மாசுபாடுகளின் தலைமகன்!   மாசுபாடு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய அனைவருக்கும் தெரிந்த வாயுக்கள்தான். ஆனால் சத்தமே இல்லாமல் நீர், காற்று ஆகிய மனிதர்கள் அடிப்பதை வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்பை நைட்ரஜன் வாயு ஏற்படுத்தி வருகிறது.  பொதுவாக ஆபத்தற்றது என கருதப்படும் இந்த வாயு, வளிமண்டலத்தில் 78 சதவீதம் காணப்படுகிறது. காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் இழுத்து வளமடையும் நிறைய பயிர்கள் மண்ணில் உண்டு. இப்படி நடைபெறும் செயல்பாடு சுழற்சியானது. இதில குளறுபடி நடக்கும்போது அனைத்துமே தலைகீழாகி பிரச்னை தொடங்கிவிடுகிறது.. எளிதாக நாம் பார்க்கும் பிரச்னை, நீர்நிலையில் பிற உயிரினங்கள் வாழ முடியாதபடி பாசிகளின் ஆக்கிரமிப்பு. இது வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயுவின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் முக்கியமான பாதிப்பாகும்.  காற்றிலுள்ள நைட்ரேட்டுகளை மழை கரைத்து நீர்நிலைகளில் சேர்க்கிறது. அங்கு பாசிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நைட்ரஜன், நீரிலுள்ள ஆக்சிஜனை உறிஞ்சுகிறது. இதனால் அதிலுள்ள உயிரினங்கள் மெல்ல அழிவைச் சந்திக்கின்றன. இந்த வகையில் உலகில் 400க்கும் மேற்பட்ட நீர்நிலைப்பகுத