பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் பெண்மணி! - டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள்
டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் ஸ்கை பெர்ரிமன் skye perryman அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தவர் அமெரிக்காவில் ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்துவிட்டார். அரசு, பல்வேறு நிதி நல்கைகளை நிறுத்திவருகிறது. ஸ்கை, மாணவர்களுக்கு அரசு வழங்கும் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு கோரி சட்டப்போராட்டம் நடத்திவருகிறார். இதற்காக டெமோகிரசி ஃபார்வர்ட் என்ற தொண்டூழிய அமைப்பை நடத்தி வருகிறார். நிச்சயம் அவர் செய்கிற பணி சவாலானது. ஒரு நாட்டின் அதிபரே ஜனநாயத்திற்கு, தாராள தன்மைக்கு எதிராக இருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், அந்த நாட்டு மக்களே அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது நகைமுரண். மக்கள் அழுத்தம் கொடுத்து தங்களுக்கு தேவையான சேவைகளை பெற முடியும் என நிரூபிக்க ஸ்கை பெர்ரிமன் போராடுகிறார். நாம் ஆபத்தான நிலையில்லாத உலகில் வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. அதனால், எப்போதையும் விட மக்களுக்காக போராடும் போராளிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள். நேரடியான தெளிவான செயல்பாடுகளுக்கு ஸ்கை பெர்ரிமன் போன்ற ஒருவர் தேவைப்படுகிறார். கெல்லி ராபின்சன் சாண்ட்ரா டயஸ் sandra diaz இயற்கை பன்மைத்துவ போராளி ஒர...