இடுகைகள்

விமானவிபத்து! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விமானவிபத்து ஏற்படுத்தும் பறவைகள்!

அறிவோம் தெளிவோம் ! அண்மையில் பெங்களூருவைச் சேர்ந்த விஸ்தாரா விமானம் பறவைகளின் தாக்குதலுக்கு உள்ளாக , பயணிகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டு பயணித்தனர் . பறவைகளை விமானத்தில் மோதுவதால் விமானம் விபத்தில் சிக்கும் பேரபாயம் ஏற்படுகிறது . கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் பறவைகளின் மோதலால் உள்நாட்டு விமானங்களுக்கு 25 கோடி நஷ்டம் ஏற்பட்டது . பயணிகளுக்கு காலதாமதமும் , விமானங்களுக்கு பேரிழப்பும் ஏற்படுத்தும் பறவைத் தாக்குதல் நிகழ்வுகள் கடந்த இரு ஆண்டுகளாக 50% அளவு அதிகரித்துவருகின்றன . குடியிருப்புகள் , இறைச்சிக்கடைகள் , சதுப்புநிலங்கள் , குளங்கள் நிறைந்திருப்பது பறவைத்தாக்குதல்கள் நிகழ காரணம் என விமானநிலைய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர் . 2012 ஆம் ஆண்டு 607 ஆக இருந்த பறவை தாக்குதல் சம்பவங்கள் , கடந்தாண்டில் ஆயிரத்து 125 என அதிகரித்துள்ளது விமானநிலைய கட்டுமானம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு செலுத்தவேண்டிய முக்கியத்துவத்தை கூறுகிறது . " நவி மும்பை விமானநிலையம் கர்னாலா பறவைக் காப்பகத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது தவறான கட்டுமானத்திற்கு சிறந்த உதாரணம் . அப்புறம்