இடுகைகள்

தந்தி1 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவுத்துறை இன்ஸ்பெக்டருக்கும், கலப்பட உணவுப்பொருள் நிறுவனத்திற்குமான கருத்தூசிச் சண்டை! - பட்டாபிராமன்

படம்
                        பட்டாபிராமன் ஜெயராம், மியா ஜார்ஜ் இயக்குநர் கண்ணன் அரசின் உணவுத்துறையில் இன்ஸ்பெக்டராக உள்ள பட்டாபிராமன், மாநிலத்தில் பெரிய உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் மோதி, கலப்பட உணவுகளை தடுத்து நிறுத்த முயல்கிறார். இதற்காக அவர் கொடுக்கும் விலை, சந்திக்கும் அவமானங்கள் இவைதான் கதை. உணவுப்பொருட்களில் உள்ள கலப்படத்தைப் பற்றி பேசுகிற நோக்கம் எந்த குறையும் கொண்டதில்லை. ஆனால், அதுவே படத்தை பார்க்க வைக்கத் தூண்டாது அல்லவா? பெரும்பாலான காட்சிகளில் நாயகன் வசனமாகவே நிறைய விஷயங்களைப் பேசுகிறார். இதனால், வில்லன்கள் செய்யும் கலப்பட சமாச்சாரங்களை விட அவர்களை எதிர்கொண்டு நாயகன் பேசும் வசனங்கள் பெரும் பயத்தை, பீதியை மனதில் விதைக்கின்றன. ரசம் வைக்கத் தெரிந்தால் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்பதெல்லாம் கண்ணைக் கட்டுகிற காட்சி. ரசம்தான் நாயகனுக்கே வைக்கத் தெரிகிறதே அப்புறம் என்ன? அவரும் குடித்துவிட்டு மனைவிக்கும் கொடுத்தால் பிரச்னை முடிந்ததுதானே? ஆனால் படத்தின் இயக்குநர் அந்த திசையில் யோசிக்கவில்லை. நேர்மையாக வாழ விரும்புகிற ந...