இடுகைகள்

கர்நாடகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாடநூல்களில் ஜனநாயகத்தன்மை குறைகிறது! - கர்நாடக அரசு பாடநூல்களில் ஏற்படும் புதிய மாற்றம்

படம்
  எழுத்தாளர் தேவனூர் மகாதேவா கர்நாடகத்தில் உள்ள 10ஆம் வகுப்பு பாட நூல்களில் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு புதிய எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும்போல இதை எப்படி நீக்கலாம், அவருடையதை எப்படி சேர்க்கலாம் என விவாதங்கள் கிளம்பியுள்ளன. இப்போது கன்னடம் மற்றும் சமூக அறிவியல் நூல்களில் இடம்பெற்ற எழுத்தாளர்களைப் பார்ப்போம்.  எழுத்தாளர்களின் படைப்புகளுக்கான மதிப்பீட்டு கமிட்டி தலைவர் எழுத்தாளர் ரோகித் சக்ரதீர்த்தா.  பானன்ஜே கோவிந்தாச்சார்யா (சுகான்சனா உபதேஷா) சமஸ்கிருத கல்வியாளர். இவர் 2020ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். 13ஆம் நூற்றாண்டு த த்துவ அறிஞர் ஸ்ரீ மாதவாச்சாரியாவின் பல்வேறு படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருத இலக்கிய படைப்புகளை மொழியாக்கம்செய்து கன்னட இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். இந்த வகையில் 150 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கன்னடர்கள், துளுவர்கள் ஆகிய இனக்குழுக்களுக்கு இடையில் பிரபலமானவை. புராணங்களை பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் கைதேர்ந்த எழுத்தாளுமை.  சதாவதானி கணேஷ் (ஷ்ரேஷ்ட பாரதிய சின்டனேகலு) இவர் சமஸ்கிருத கவிஞர், கல்வியாளர்

பழங்குடிகளை முன்னேற்றிய காடுகள் வளர்ப்பு!

படம்
  பழங்குடிகளை முன்னேற்றிய காடுகள் வளர்ப்பு கர்நாடக மாநிலம் உடுப்பியில் கொரகா பழங்குடி இனத்தினர், காடுகள் வளர்த்து தம் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டுள்ளனர்.  கர்நாடகத்திலுள்ள பழங்குடி இனங்களில் மிகவும் பிற்பட்டவர்கள் கொரகா பழங்குடியினர். இவர்கள் தற்போது ஆக்சன் எய்டு இந்தியா, கொரகா பௌண்டேஷன் ஆகிய அமைப்புகள் மூலம் நிதியுதவி பெற்று பழமரங்களை வளர்த்து வருகின்றனர். முதலில் குத்தகை முறையில் பழமரங்கள், நெல் ஆகியவற்றை வளர்த்தவர்கள் இன்று சொந்தமாக நிலங்களை வாங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.  கர்நாடகத்தின் வனச்சட்டம் 1963, 1972 ஆகியவற்றால் காட்டில் வாழ்ந்த கொரகா பழங்குடிகள் அங்கிருந்து வெளியேற நேரிட்டது. நகருக்குள் வந்தவர்கள் பிரம்பு பொருட்களை செய்தும், மனிதக்கழிவுகளை அகற்றியும் வாழ்ந்து வந்தனர்.  இவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் செய்த உதவியால் பல்வேறு நிலப்பரப்புகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தனர்.  இதன் விளைவாக, 49  ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதில் 47 ஆயிரம் ஏக்கர் கொரகா உள்ளிட்ட பழங்குடி இனக்குழுவினர் உருவாக்கியதாகும்.  இச்சாதனையைப் பாராட்டி இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் ஹேப

கர்நாடகத்தை உயர்த்தும் சிறப்பு கல்விப் பயிற்சி!

படம்
கல்விப் பயிற்சி ஆசிரியர்கள் கல்விச்சாதனைக்கு உதவும் தனியார் நிறுவனங்கள்! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கல்விப் பயிற்சியை தனியாரும், அரசு நிறுவனங்களும் இணைந்து வழங்கி தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் கனவுகளைத் தேர்ந்தெடுக்க அனைத்து வகுப்புகளிலும் கவனமாகப் படித்து தேர்ச்சி பெறுவது மிக முக்கியம்.  துறைசார்ந்த பொதுத்தேர்வுகளில் பங்கேற்றவும் இத்தகுதி அவசியம். கர்நாடகாவிலுள்ள தேவனஹலி, நெலமனகலா நகரங்களில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்று மாநில அளவில் கவனம் ஈர்த்துள்ளனர். பள்ளிகளில் நடுப்பருவத் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களைத்தான் எஸ்எல்எல்சி மாணவர்கள் பெற்றனர். ஆனால் ஆண்டு இறுதித்தேர்வில் மேற்சொன்ன இருநகரங்களும் தேர்ச்சி சதவீதப் பட்டியலில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்தன.  எப்படி?  குறைந்த மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு பெங்களூரு சர்வதேச விமானநிலை நிறுவனம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து சமூகநலத் திட்டத்தின்படி கொடுத்த கல்விப்பயிற்சிதான் இதற்கு காரணம். இப்படி 1,983 மாணவர்களுக்கு சிறப்பு கவ

பாலம் கட்டிய கிராமத்து மக்கள் - இது கர்நாடக நமக்கு நாமே முயற்சி!

படம்
நமக்கு நாமேதான் உதவி! மத்திய அரசு, மாநில அரசு என நம்பாமல் தம்முடைய வாழ்க்கையை தானே தோளில் சுமக்க முடியும் என நம்புகிறவர்கள் தென்னிந்தியர்கள். இதனால்தான் எத்தனை இக்கட்டான நிலையிலும் அரசு கைவிட்டாலும் கடவுளே கைவிட்டாலும் மனிதர்கள் உதவுகிறார்கள். இதற்கான எடுத்துக்காட்டுகளை இயற்கைப் பேரிடர்களில் நாம் காணலாம். தற்போது கர்நாடகத்திலும் இத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இம்மாநிலத்திலுள்ள சிவமோகா மாவட்டத்திலுள்ள பிராமணகெபிகே என்ற ஊரில் மழை வெள்ளத்தில் பாலம் ஒன்று உடைந்து நொறுங்கிவிட்டது. அதனை சரிசெய்ய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. உடனே ஊடகங்களிடம் புகார் சொல்லாமல், கிராமத்தினரே களமிறங்கி கிடைக்கும் பொருட்களை வைத்து தற்காலிகமாக பாலத்தை கட்டியிருக்கிறார்கள். காலை 7.30க்கு வேலையைத் தொடங்கி மாலை 4.30க்கு வேலையை முடித்துவிட்டனர். பின்னே தினசரி வேலை நடக்கவேண்டுமே! கிராம பஞ்சாயத்து 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்த பாலத்தைக் கட்டியுள்ளனர். ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி கூட உங்களுக்குத் தோன்றலாம். அரசு அதிகாரிகள் பசி என்ற உணர்வு தோன்றும் முன்பே உணவுத்தட்டுகள் அவர்கள் முன்