கர்நாடகத்தை உயர்த்தும் சிறப்பு கல்விப் பயிற்சி!




கல்விப் பயிற்சி ஆசிரியர்கள்




கல்விச்சாதனைக்கு உதவும் தனியார் நிறுவனங்கள்!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கல்விப் பயிற்சியை தனியாரும், அரசு நிறுவனங்களும் இணைந்து வழங்கி தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துள்ளனர்.
மருத்துவம், பொறியியல் கனவுகளைத் தேர்ந்தெடுக்க அனைத்து வகுப்புகளிலும் கவனமாகப் படித்து தேர்ச்சி பெறுவது மிக முக்கியம்.  துறைசார்ந்த பொதுத்தேர்வுகளில் பங்கேற்றவும் இத்தகுதி அவசியம். கர்நாடகாவிலுள்ள தேவனஹலி, நெலமனகலா நகரங்களில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்று மாநில அளவில் கவனம் ஈர்த்துள்ளனர்.

பள்ளிகளில் நடுப்பருவத் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களைத்தான் எஸ்எல்எல்சி மாணவர்கள் பெற்றனர். ஆனால் ஆண்டு இறுதித்தேர்வில் மேற்சொன்ன இருநகரங்களும் தேர்ச்சி சதவீதப் பட்டியலில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்தன.  எப்படி?

 குறைந்த மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு பெங்களூரு சர்வதேச விமானநிலை நிறுவனம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து சமூகநலத் திட்டத்தின்படி கொடுத்த கல்விப்பயிற்சிதான் இதற்கு காரணம். இப்படி 1,983 மாணவர்களுக்கு சிறப்பு கவனம் அளித்து தேர்ச்சியில் சாதிக்க வைத்துள்ளனர். 2017-18ஆம் ஆண்டில் எஸ்எல்எல்சி மாணவர்களின் தேர்ச்சி  73 சதவீதம். 2018 -19 ஆம் ஆண்டில், இம்மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 83 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக கர்நாடகத்தைக் கூற காரணம், தென்னிந்தியாவில் எஸ்எஸ்எல்சி தேர்வில் மிக குறைந்த தேர்ச்சி சதவீதம் கொண்டுள்ள மாநிலம் இதுவே. இவற்றோடு ஆந்திரம் (94.88%), தெலங்கானா (92.43%), கேரளம் (98.11%), தமிழ்நாடு (95.2%) ஆகிய அண்டை மாநிலங்கள் சிறப்பான தேர்ச்சி சதவீதத்தைக் கொண்டுள்ளன. 

முழு ஆண்டுத்தேர்வுக்கு முன்னதாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன. ”ஐந்து மாதங்கள் நடந்த பயிற்சி மாணவர்களுக்கு தேர்ச்சி பெற உதவியதோடு, அவர்களின் கற்கும் திறன் அளவையும் மேம்படுத்தியது” என்கிறார் இத்திட்டத்தின் இயக்குநரான  லதா.
”பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்ல; ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரையிலான மாணவர்களையும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம். மாணவர்களுக்கு சிறப்புப்பயிற்சி நல்ல தேர்ச்சியை வழங்கியுள்ளது” என்றார் அசீம் பிரேம்ஜி
பௌண்டேஷனின் மாவட்ட மையத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீதரன்.

லதா, 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குநராக பொறுப்பேற்றார். அதற்கு ஒருமாதம் கழித்து தேர்வு முடிவுகள் வெளிவர, மாவட்டம் ஐந்து இடங்கள் பின்தங்கி இருந்தது. உடனே கல்வி அதிகாரிகள் கூட்டம் அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. பின்னர் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட சிறப்பு பிரிவுக்குள் கொண்டு வரப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு இச்சாதனையைச் செய்துள்ளனர்.

தகவல்: IndiaSpend

வெளியீடு - தினமலர் பட்டம்