ASMR வீடியோக்கள் பெருகி வருகின்றன!



What is ASMR? 5 ASMR Facts - YouTube




ஆம் அப்படித்தான் கூகுள் ட்ரெண்ட்ஸ் கூறுகிறது. ஏஸ்எம்ஆர் என்றால் அட்டானமஸ் மெரிடியன் சென்சரி  ரெஸ்பான்ஸ் என்று கூறலாம்.

சாதாரணமாக ஓரிகாமி, சமையல்  உள்ளிட்ட வீடியோக்களை நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா அந்த வீடியோக்களைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்கள். இந்த வீடியோக்களில் இன்று நூறு என கூகுள் டிரெண் ட்ஸ் குறிப்பிடுகிறது. எந்த மாநிலங்களைத் தெரியுமா? மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநில மக்கள்தான் இந்த வீடியோக்களை ஆர்வமாக அதிகமாக பார்த்திருக்கிறார்கள்.

இந்த வீடியோக்களின் டிரெண்டு அமெரிக்காவில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. இன்றும் இந்த ஏஎஸ்எம்ஆர் வீடியோக்களுக்கான நிகழ்ச்சிகளை தயாரிப்பவர்களுக்கு பத்தாயிரம் டாலர்கள் வரை வருமானம் கிடைக்கிறது. என்ன வீடியோக்களை பதிவிடுவது? ஐபோன் விமர்சனம் முதல் படுக்கும்போது குழந்தைகளுக்கு சொல்லும் கதை வரை எதை வேண்டுமானானாலும் சொல்லுங்கள். வீடியோ வடிவில் இதனை தயாரித்தால் சோலி முடிந்தது.


இதற்கான வீடியோ தயாரிப்பவர்கள் ஒலியைப் பதிவு செய்வதற்காக தனி மைக்ரோபோன்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பாத்திரம் தேய்க்கும் ஒலி, சாப்பிடும் போது ஏற்படும் சத்தம் என தனித்துவமாக பதிவாகிறது. இது இன்சோம்னியா, மனப்பதற்றம் உள்ள மக்களின் மனதை அமைதிபடுத்துவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இந்தவகை வீடியோக்களைப் பார்ப்பது மக்களின் இதயத்துடிப்பை குறைப்பதாக கூறுகிறார்கள். இன்ஸ்டாகிராம், டிக்டொக் ஆகிய செயலிகளிலும் இந்த வீடியோக்கள் கிடைக்கின்றன. ஸ்பாட்டிஃபை போன்ற இணைய பாடல்கள் கேட்கும் சேவையிலும் ஏஎஸ்எம்ஆர் ஒலிகளைக் கேட்டு இன்புறலாம். இதற்கான பொருட்களை ஐகியா, குசி உள்ளிட்ட ஃபேஷன் நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளன.

நன்றி: எகனாமிக் டைம்ஸ்