இந்தியாவில் பிகேவியர் எகனாமிக்ஸ் வேலை செய்யும்!
நேர்காணல்
கேஸ் சன்ஸ்டெய்ன்
இந்தியாவிற்கு பிகேவியர் எகனாமிக்ஸ் தேவை!
நீங்கள் கூறும் பிகேவியர் எகனாமிக்ஸ் எப்படி செயல்படுகிறது?
இதன் அடிப்படை யாரையும் கட்டாயப்படுத்தாத தன்மை. மருத்துவமனைகளோ, வங்கிகளோ தங்களது செயல்பாடு தொடர்பான விஷயங்களை அறிவிக்கலாமே தவிர கட்டாயப்படுத்தக்கூடாது. இப்போது மார்க்கெட்டில் பாருங்கள். பிஸ்கட், சீஸ் ஆகியவற்றில் கலோரிகள் அச்சிடப்பட்டிருக்கும். அதில் கலோரிகளை நீங்கள் கணக்கிட்டுப்பார்த்து உங்களுக்குத் தேவை என்றால் அதனை வாங்கலாம். இதுதான் பிகேவியர் எகனாமிக்ஸ்.
இம்முறையில் மக்களுக்கும் அரசுக்கும் நிறைய ஆதாயங்கள், பொருளாதார பலங்கள் உண்டு. இந்தியா வளரும் நாடு, பெரிய நாடாக உருவாகவில்லை . ஆனால் இந்தவகை பொருளாதார உத்தியைப் பயன்படுத்தினால் திறமையான நாடாக வளர வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கு இந்த பொருளாதார உத்தி எப்படி பயனளிக்கும்?
இந்தியாவுக்கு நிச்சயம் பயனளிக்கும். ஏனெனில் மக்கள் குறைந்த, பன்மைத்துவம் கொண்ட நாடுகளில் இக்கொள்கை பயன் அளித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார அறிக்கையில் இரண்டாவது அத்தியாயத்தில் இதனைப் பயன்படுத்திய எடுத்துக்காட்டு உள்ளது. திறந்தவெளி மலம் கழிப்பதை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தியாவில் இதனை எப்படி மேற்கொள்வீர்கள்?
நீங்கள் கேள்வி கேட்பதைப் பார்த்தால் நான் ஏதோ பொருளை விற்பது போல படுகிறது. லண்டனில் சிறப்பு அங்காடி உள்ளது. அதில் பொருட்களை வாங்குபவர்களுக்கு ஒரே நிபந்தனைதான். ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுக்கவேண்டும். இதன் மூலம் எந்த தூண்டுதல் இல்லாமல் அவர்களே சரியான பொருட்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இதே விஷயத்தை தகவல் தொடர்பின்றி செய்வதே நல்லது. இந்தியா போன்ற பலமொழிகள் பேசும் நாட்டில் இது சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் இது சமாளிக்க ஆச்சரியமளிக்கும் புதிய சவால்தான்.
பொருளாதார அறிக்கையில் பிகேவியர் எகனாமிக்ஸ் என்பதை அமல்படுத்துவது பற்றி கூறியிருந்தீர்கள். இதில் உங்களது அறிவுரை என்ன?
இக்கொள்கையை நேற்றே செய்திருந்தால் நல்லது. அப்படி செய்யவில்லையா? இன்று செய்யுங்கள். இன்று செய்யவில்லை என்றால் இன்று இரவு செய்யுங்கள். நாளை என்பது மிக தாமதம் என்பது என்னுடைய கருத்து.
உங்களது கொள்கை வரி கட்டுவதற்கு உதவுமா?
நிச்சயமாக. உலகின் பல நாடுகளிலும் வெற்றிக்கதைகள் உண்டு. நிறைய இடங்களில் மக்களுக்கு இந்தமுறை வெற்றியைத் தந்துள்ளது. அதனால்தான் அவர்கள் அரசுக்கு வரி கட்டி சிறந்த குடிமகனாக தங்களை நிரூபித்து உள்ளனர். இந்த முறை உங்களது வாழ்க்கையை நிச்சயம் மாற்றும்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா - சுரோஜித் குப்தா.
கேஸ் சன்ஸ்டெயின்,ஹார்வர்டு பல்கலையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். நட்ஜ் எனும் நூலை எழுதி அதில் கூறியுள்ள பொருளாதார கருத்துக்களுக்காக நோபல் பரிசு வென்றார். ஒபாமா காலத்தில் வெள்ளை மாளிகையில் தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றியவர்.