இடுகைகள்

முழங்கால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பின்தங்கும் ஆங்கில நூல்கள் வாசிப்பு!

படம்
  திறமைக்கான வாய்ப்பு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? மருத்துவர் முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம் . அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும் . அதில் சாதித்து வெல்ல முடியும் . நான் வேலை செய்யும் இதழின் பொறுப்பாசிரியர் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர் . இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம் . எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது . ஆனால் , நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது . இதுவரையிலும் பிறரிடம் நான் செய்த வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது . இப்போது முழங்கால் வலி மட்டுப்பட்டுள்ளது . இதனால் நடக்க முடிகிறது . உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன் . இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன் . அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதால் ஏற்படும் ஆற்றல் இழப்பை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம் எனத் தோன்றுகிறது . அன்பரசு 13.8.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------ டிஜிட்டல் வடிவில் மாறும் வாசிப்பு

மனிதர்களின் உடலில் எத்தனை விதமான மூட்டுகள் உள்ளன தெரியுமா?

படம்
   மூட்டுகள் பற்றி அறிவோம்... மனிதர்களின் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவை, உடலிலிருந்து நழுவாமல் இயங்க மூட்டுகள் உதவுகின்றன. இவற்றில் அசையும் மூட்டு, அசையா மூட்டு என இருவகை உண்டு. அசையும் மூட்டுகளுக்கு தோள்மூட்டு, இடுப்பு மூட்டு எடுத்துக்காட்டாகும். அசையா மூட்டுக்கு மண்டையோட்டு எலும்புகள் சான்று.    முழங்கால், முழங்கை ஆகியவை  கீல் மூட்டு இணைப்பைக் கொண்டவை. இவை கதவைப் போல திறந்து மூடுபவை. எலும்புகளை உறுதியான வளையும் தன்மை கொண்ட குருத்தெலும்பு (Cartilage) பாதுகாக்கிறது. முதுகுத்தண்டிலுள்ள எலும்புகளை குருத்தெலும்பு இணைக்கிறது. இதன் வளையும் தன்மை, அதிர்ச்சியை தாங்கும் ஆற்றலைத் தருகிறது. முதுகுத்தண்டில் ஏற்படும் அதிர்ச்சியை அதன் முள்ளெலும்புகளை இணைத்துள்ள குருத்தெலும்பு தாங்குகிறது.   முளை மூட்டு (Pivot Joint) மனிதர்கள் திரும்புவதற்கு உதவும் தாடைக்கு கீழுள்ள மூட்டு. ஆனால், இவை பக்கவாட்டில், முன், பின்பக்க இயக்கம் கொண்டவை அல்ல.  கீல் மூட்டு (Hinge joint) மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் முன்னே, பின்னே நகரும். ஆனால் பக்கவாட்டில் நகராது.  தகட்டு மூட்டு (Gliding joint) தட்டை எலும்புகளுக்கு இடைய

முழங்காலில் வழியாக உடலெங்கும் பாயும் மின்சாரம்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  அம்மா மற்றும் தங்களின் நலம் நாடுகிறேன். இந்த வாரம் நோய்களின் வாரம் என்றே சொல்லவேண்டும். ஆண்டுக்காக கண் பரிசோதனைக்கு ஆழ்வார்பேட்டைக்கு சென்றேன். அங்குள்ள உதி அறக்கட்டளை நடத்தும் உதி மருத்துவமனையில் சில ஆண்டுகளாக சோதனை செய்து வருகிறேன். கண்கள் வறண்டு வருகிறது. சில ஆண்டுகளில் காட்சியைப் பார்க்கும்போது மின்னல் வெட்டு, கரும்புள்ளி தோன்றினால் உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள் ஷெரின் ரவீந்திரன் கூறினார். இதில் பெண் மருத்துவரான அன்பரசி கூறியதும் சோதித்ததும் எனக்கு திருப்தியாக இல்லை. இவர் மருத்துவமனையில் உள்ள லேசிக், கான்டாக்ட் லென்ஸ் திட்டங்களை ஒப்பித்தார். மற்றபடி கண்களில் உள்ள பவர், மூன்று ஆண்டுகளாக அப்படியே தொடர்கிறது.  மருத்துவமனை போய்விட்டு வரும்போது எங்கு கால்களை ஊன்றினேனோ, கால் தசை பிசகிவிட்டது. முழங்காலில் மின்சாரம் பாய்வது போன்று வலி கடுமையாக இருக்கிறது. ஆபீசிற்கு காலை நொண்டிக்கொண்டுதான் சென்று வந்தேன். மயிலாப்பூரில் உள்ள சம்பத் மருத்துவமனைக்கு சென்றேன். வர்த்தமான் என்ற வட இந்திய மருத்துவர்தான் எனக்கு சிகிச்சை அளித்தார். மரு