இடுகைகள்

கப்பர்சிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளவரசியைக் கரம்பிடித்து சுரங்க மாஃபியாவை ஒழிக்கும் போலீஸ்காரர்! - சர்தார் கப்பர் சிங் - பவன், காஜல்

படம்
  சர்தார் கப்பர் சிங் இயக்கம் பாபி (கே.எஸ்.ரவீந்திரா) கதை, திரைக்கதை, தயாரிப்பு பவர்ஸ்டார் பவன் கல்யாண் இசை ராக்ஸ்டார் டிஎஸ்பி   கப்பர் சிங் படத்திற்கு பிறகு அதேபோல தயாரிக்கப்பட்டிருக்கும் மற்றொரு படம். இங்கு கப்பார் சிங்கோடு சர்தார் கூடுதலாக சேர்கிறது. இது தனிக்கதையாக உருவாகிறது. இந்த கதையில் குடும்ப பாசம் ஏதும் கிடையாது. தொடக்க காட்சியில், திருடர் கூட்டத்தை போலீசார் விரட்டி வர,   கழுத்தில் கத்தி வைத்தாலும் கூட துணிச்சலாக அவர்களைக் காட்டிக்கொடுக்கிறான் சிறுவன் ஒருவன். அவன்தான் நாயகன். சர்தார் கப்பர் சிங். அவன் ஆதரவற்ற சிறுவனாக இருக்கிறான். அவனைப்போலவே இருக்கும் இன்னொரு சிறுவனுக்கும் அவனே பெயர் சூட்டி தனது நண்பனாக்கிக் கொள்கிறான். இவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? நட்பிற்கு உதாரணமான சர்தார் கப்பார் சிங்கும், அவரது நண்பரான சாம்பாவும்தான். (பவன்-அலி= நட்பே துணை ) சர்தார் கப்பர் சிங் படம், தெலுங்கு பேசும் ஆந்திரத்தில் உருவாக்கப்படவில்லை. ரந்தம்பூர் எனும் இடத்தில், இன்றும் ராஜாக்கள் தொழில்களை கையகப்படுத்தி இயற்கை வளத்தை மக்களை நசுக்கி வரும் இடத்தில்   நடைபெறுகிறது.