இடுகைகள்

மாரடைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாரடைப்பில் இறந்துபோன பேசாத தாய்மாமன்! - கடிதங்கள்

படம்
நூலகத்திற்கு நூல்களை வழங்குதல் அன்பு நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? அண்மையில் எனது தாய்மாமன்களில் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். பெரிய காரியம் காரணமாக அலைந்துகொண்டிருக்கிறேன். இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டோடு பேச்சுவார்த்தையே இல்லாதவர், கந்தசாமி மாமா.  கடந்த மூன்று ஆண்டுகளாக அம்மாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். இதெல்லாம் அவரது இறந்து கிடந்த உடலைப் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. அம்மா கண் ஜாடை காட்ட, அவரது உடலை தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். விரைவில் ஆபீஸ் செல்லவேண்டும். வரச்சொல்லி அழைப்பு வந்துவிட்டது. கொரோனா காரணமாக சம்பளத்தையும் குறைத்துவிட்டார்கள். இருக்கும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள சம்பள வெட்டையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.   வீட்டிலிருந்து வேலைபார்க்கும் போது தஞ்சை ப்ரகாஷ், தி.ஜானகிராமன், வர்க்கீஸ் குரியன் ஆகியோரின் நூல்களைப் படித்தேன். அதுவே மகிழ்ச்சி. திருவண்ணாமலையில் கிடைத்த நம்மாழ்வார் நூல்கள், எனது படிப்பிற்காக வாங்கிய அனிமேஷன் நூல்களை வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு கொடுத்துவிட்டேன். நிறைய நூல்களை வைத்துக

மாரடைப்பைத் தடுக்கும் புதிய வழிகள்!

படம்
                மாரடைப்பைத் தடுப்பது எப்படி ? மாரடைப்பைத் தடுக்க சிபிஆர் , டிபைபிரிலேட்டர் ஆகிய வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள் . அப்படி இல்லாமலும் நிறைய நுணுக்கங்கள் உள்ளன . கொழுப்பைத் தடுப்பது பொதுவாக ர்த்தத்தில் உள்ள கேடு தரும் எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது . இதனை தடுக்க பிசிஎஸ்கே 9 எனும் மருந்தை பயன்படுத்தலாம் . இந்த மருந்து கல்லீரலில் உள்ள புரதத்தை முடக்கி எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் பணியைச் செய்கிறது . அழற்சி இதயத்திலுள்ள ஆர்டரியில் ஏற்படும் அழற்சி , மாரடைப்பை தூண்டுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் . கனாகிநுமாப் எனும் மருந்தை ஆய்வாளர்கள் சோதித்தனர் . 2017 இல் நடைபெற்ற சோதனையில் மாரடைப்பை இந்த மருந்து 24 சதவீதம் குறைப்பது தெரிய வந்துள்ளது தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிற , விலையுயர்ந்த மருந்து என்பதால் இதனை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை . மாரடைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கான வாசலை இந்த மருந்து பற்றிய சோதனை திறந்து வைத்துள்ளது என்று சொல்லலாம் . மாரடைப்புக்கு

உடலை இயக்கும் ஸ்பார்க் பிளக்கைக் கொண்ட இதயத்தின் செயல்பாடு!

படம்
                  உடலே நலமா ? உடலுக்கு சக்தி கிடைக்க உணவு அவசியம் . அதோடு சுவாசிக்க காற்று முக்கியம் . இதெல்லாம் இருந்தாலும் கூட உடலெங்கும் உறுப்புகள் செயல்பட ரத்தம் உடலெங்கு் செல்வதற்கு சர்குலேட்டர் அமைப்பு உதவுகிறது . இப்படி செல்லும் ரத்தத்தில் ஆக்சிஜன் , மினரல்கள் உள்ளன . இந்த ரத்தம் தலை முதல் கால் வரை ஓடிக்கொண்டே இருக்கிறது . இதில் தடுமாற்றம் ஏற்பட்டால் உடனே பாதிப்பு ஏற்படும் . உடலின் நரம்புகள் , ஆர்டெரி , காபிலரிஸ் என அனைத்து இடங்களிலும் ரத்தம் பயணிக்கும் தொலைவு தோராயமாக பத்தாயிரம் கி . மீ . என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் . இதய வல்லுநர்கள் பர்ஃபியூஸ் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்த விரும்புவார்கள் . இதுதான் சர்குலேட்டர் அமைப்பைக் குறிக்கிறது . இதில்தான் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் சென்று வருகிறது . இதன்மூலம்தான் சத்துகள் உறுப்புகளுக்கு சென்றுசேர்வதோடு , உடலுக்கு தேவையான ஹார்மோன்கள் சரியாக சுரப்பதையும் உறுதி செய்கிறது . செல்களுக்கு ஆபத்து ஏற்படுத்து்ம் கழிவுப் பொருட்களை அகற்றுவதோடு , கார்பன் டை ஆக்சைடையும் உடலிலிருந்து வெளியேற்றுகிறது . உடல் வெப்பநிலையை பர

மாரடைப்பு வந்தாலும் மக்களுக்கு சிகிச்சை செய்வேன்! - அர்ப்பணிப்பான கேரள மருத்துவரின் கொரோனா சாதனை!

படம்
            மருத்துவர் சந்தோஷ்(மஞ்சள் உடையில்)         சந்தோஷ்குமார் மருத்துவர் நோயாளியைத் தேடித்தான் மருத்துவர்கள் முன்னர் சென்று வந்தார்கள் . ஏன் தெரியுமா ? மருத்துவரை தேடி நோயாளிகள் அலைந்தால் அவர்களின் நோய் இன்னும் கூடுதலாக அதிகரித்துவிடும் ஆபத்து உள்ளது என்பதால்தான் . மருத்துவர் சந்தோஷ்குமார் தொற்றுநோ்ய் பாதிப்புள்ள சியரா லியோன் , போர் ஆபத்துள்ள சிரியா என எந்த இடத்திலும் தயக்கமே இல்லாமல் சென்று தனது மருத்துவச்சேவையை அளித்துள்ளார் . இருபது ஆண்டுகாலத்தில் நாற்பது நாடுகளுக்கு சென்று மருத்துவச் சேவையை அளித்துள்ளார் . கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவக்கல்லூரியில் அவசரகால சிகிச்சைத் துறையின் டெபுடி சூப்பிரடெண்டாக பணியாற்றிவருகிறார் . இந்த மருத்துவக்கல்லூரி தொடங்கியபோது இவர் உட்பட பல்வேறு மருத்துவர்களுக்கு எப்படி செயல்படுவது என்ற எந்த நூலும் பின்பற்றுவதற்கு கிடையாது . அனைத்துமே அனுபவ பாடங்களாக கற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிகிச்சைய உயர்த்தியுள்ளனர் . மாநிலத்தின் முக்கியமான மருத்துவமனை , பல்வேறு அதிகாரிகளால் அடிக்கடி பார்வையிடப்படும் இடமாகவும்