மாரடைப்பைத் தடுக்கும் புதிய வழிகள்!

 

 

 

 


 

 

 

 

மாரடைப்பைத் தடுப்பது எப்படி?


மாரடைப்பைத் தடுக்க சிபிஆர், டிபைபிரிலேட்டர் ஆகிய வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள். அப்படி இல்லாமலும் நிறைய நுணுக்கங்கள் உள்ளன.


கொழுப்பைத் தடுப்பது


பொதுவாக ர்த்தத்தில் உள்ள கேடு தரும் எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இதனை தடுக்க பிசிஎஸ்கே9 எனும் மருந்தை பயன்படுத்தலாம். இந்த மருந்து கல்லீரலில் உள்ள புரதத்தை முடக்கி எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் பணியைச் செய்கிறது.


அழற்சி


இதயத்திலுள்ள ஆர்டரியில் ஏற்படும் அழற்சி, மாரடைப்பை தூண்டுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். கனாகிநுமாப் எனும் மருந்தை ஆய்வாளர்கள் சோதித்தனர். 2017இல் நடைபெற்ற சோதனையில் மாரடைப்பை இந்த மருந்து 24 சதவீதம் குறைப்பது தெரிய வந்துள்ளது தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிற, விலையுயர்ந்த மருந்து என்பதால் இதனை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. மாரடைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கான வாசலை இந்த மருந்து பற்றிய சோதனை திறந்து வைத்துள்ளது என்று சொல்லலாம்.


மாரடைப்புக்கு எதிரான தடுப்பூசி


இம்பீரியல் கல்லூரியில் இயற்கையில் கிடைக்கும் ஆன்டிபாடிகளைப் பயன்படுத்தி ரத்தத்திலுள்ள எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த வகையில் ஆராய்ச்சி சிறப்பாக நடைபெற்றால், மாரடைப்பைத் தடுக்கும் தடுப்பூசி எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கலாம்.


இதயதசைகளை மீட்பது


இதய தசைகளைப் பொறுத்தவரை இயங்கும் வரைதான் இயங்கும். அதிலுள்ள செல்கள் ஒருமுறை இறந்துவிட்டால் பிறகு அதனை புதுப்பிக்க முடியாது. இன்றுவரை நிலைமை அப்படித்தான் உள்ளது. பல்லாண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள். ஸ்டெம் செல்களிலிருந்து செல்களை எடுத்து இதயத்தசைகளை உருவாக்க முடியுமா என சோதித்து வருகின்றனர். இதற்காக இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சிக்குழு, பம்பிங் ஹார்ட் பேட்ச் எனும் ஸ்டெம் செல்களிலான வலை அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதனை சேதமடைந்த இடத்தில் பொருத்தினால் செல்களை திரும்ப உருவாக்க முடியும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதற்கான ஆய்வுகள் மனிதர்கள் மீது தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.


பிபிசி


சைமன் கிராம்ப்டன்





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்