குற்றம் செய்யும் சாகச உணர்வை அழுத்தி வைக்க முடியாது!

 

 

 


 

 

 

 

 

 

குற்றவாளிகள் ஒரே விதமான குற்றங்களை திரும்ப செய்கிறார்கள்? இதனை குடிநோய் போல குணப்படுத்த முடியுமா?


தொடர்ச்சியாக குற்றங்களைச் செய்பவர்கள், குறிப்பிட்ட விதிகளுக்குள் அடங்குவதில்லை. இவர்களுக்கு பணம், அதிகாரம் கட்டுப்பாடு ஆகியவை தேவைப்படுகிறது. எனவே கொலை, கொள்ளை, வல்லுறவு ஆகியவற்றை செய்கிறார்கள். குடிநோய் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கும் உண்டு. இவர்களும் பிறர் போலவே வாழ விரும்புவர்கள்தான். கொலைக்குற்றம் செயதவர்களை அதிலிருந்து மீ்ட்க வாழ்க்கைக்கல்வியை அளிக்கலாம்.


சீரியல் கொலைகாரர்கள், குற்றத்திற்கு அடிமையானவர்களா?


ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி வருகிறவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். கொலை செய்தவர்களை ஆராயும்போது முன்னர் அவர்கள் கொள்ளை அடித்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது குழந்தைகளை வல்லுறவு செய்தவர்கள், ஆபாச புகைப்படங்களை எடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே இவர்களை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூட ஒருவகையில் குறிப்பிடலாம்தான்.



இந்த குற்றவாளிக்கு இடையில் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா?


பெரும்பாலான குற்றவாளிகளுக்கு இளம் வயதில் கடுமையான மனதை பாதிக்கும் விபத்துகள், சம்பவங்கள், கேலி, கிண்டல், வறுமை, குற்றவாளியாக மாறுவது ஆகியவை ஏற்பட்டிருக்கும். இதில் எந்த விஷயங்கள் அவர்களை மாற்றியிருக்கிறது என்பதை உறுதியாக கூறமுடியாது.


ஒருவரைக் கொல்ல நினைப்பவருக்கு மனதில் அதனை அழுத்தி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?


அதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவரின் மனதில் அழுத்தி கிடக்கும் வேதனைகளின் வடிகாலாக குறிப்பிட்ட எண்ணம் உருவாகிறது. அதனை அவர் பிறரிடம் பகிர்வது கடினம். ஏனென்றால், நாம் யாரும் நம்முடைய செக்ஸ் எண்ணங்களை பிறரிடம் பகிர்வதில்லை.


தடவியல் உளவியலாளர் டாக்டர் டெர்ரி கோல்


பிபிசி



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்