எது எப்படியோ அப்படியே.... நடந்தது - மா ஆனந்த் ஷீலா -

 

 

 

https://static.spotboye.com/uploads/FilmRatingStars_thumbnail_2021-4-22-10-1-28_thumbnail.jpg

 

 மா ஷீலா

 

இந்தியாவிலுள்ள புனேவில் பிறந்த ரஜ்னீஷ் எனும் ஓஷோவை யாரும் மறக்க முடியாது. அவர் 1981இல் அமெரிக்காவின் ஒரேகான் நகருக்கு செல்ல விரும்பினார். இதற்கு பின்னணியில் அவரது உதவியாளர் மா ஆனந்த் ஷீலா இருந்தார். இவர் அங்கு ரஜ்னீஷ்புரத்தை உருவாக்கினார். பின்னாளில் பல்வேறு புகார்கள் குவிய, ஷீலாவுக்கு சிறைதண்டனை கிடைத்தது. அதிலிருந்து மீண்டு தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். இவரைப் பற்றி நெட்பிளிக்சில் சர்ச்சிங் ஷீலா என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறார் ஷீலா. அவரிடம் பேசினோம்.


இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வரும் நோக்கம் என்ன?


இறைவனின் விருப்பம் என்று கூறலாம். இதற்கு முன்னரும் நான் நிறைய முறை இந்தியாவுக்கு வர விரு்ம்பினேன். குஜராத் அல்லது பரோடாவுக்கு செல்ல மட்டும் விரும்பவில்லை. எனது வேருக்கு நான் செல்ல விரும்பினேன். இதை சொல்வது வேடிக்கையாக இருக்கலாம். இதனை நீங்கள் ஆவணப்படத்தில் பார்ப்பீர்கள். இங்கு சந்தித்த மனிதர்கள் சுவிட்சர்லாந்தில் சந்தித்த மனிதர்களை விட வேறுபட்டவர்கள். இங்கு அலைந்து திரியு்ம் பசுக்கள் கூட தனி அழகைக் கொண்டவை. இந்தியாவில் நான் சில விஷயங்களை செய்ய நினைத்திருந்தே்ன். ஆனால் கொரோனா காரணமாக அவற்றை முழுமையாக செய்யமுடியவில்லை. ஆனால் எனது வாழ்க்கை முடிவதற்குள் தேவையான விஷயங்களை செய்வேன் என்று நினைக்கிறேன்.

https://images.hindustantimes.com/img/2021/04/21/1600x900/searching_for_sheela_review_1618989773312_1618989783072.jpg

தன்னை உணர்தல் என்று ஆவணப்படத்தின் தலைப்பில் கூறப்பட்டுள்ளதே?


ஒருவரின் பிறப்பிலேயே அவரின் பாத்திரம் தெளிவாகிவிடுகிறது. அதனை நீங்கள் எப்போதும் மாற்ற முடியாது. ஒருவரி்ன் வாழ்க்கையில் மற்றொருவர் வந்தாலும் கூட அவர் தனது அசலான தோற்றத்தை நிச்சயம் வெளிக்காட்டுவார். இந்த ஆவணப்படத்திலும் நீங்கள் அதனைக் காண்பீர்கள். அசலான உண்மைகளை.


பெரும்பான்மையான மக்களிடையே உங்களைப் பற்றிய முன்முடிவுகள் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?


மக்கள் தங்களுக்கு விருப்பமான கருத்துகளை பேசுவதற்கும் நம்புவதற்கும் உரிமை உள்ளது. இதைப்பற்றி நான் அதிகமாக யோசித்ததில்லை. நான் மக்களிடையே மக்களுக்காக இருந்துள்ளேன். விமர்சனங்களைப் பொறுத்தவரை நான் அதனை சவாலாகவே எடுத்துக்கொள்கிறேன். அதனை பார்வையாளர்களிடமிருந்து பெறுகிறேன். அவற்றை மக்களைப் பற்றியதாகவே நினைக்கிறேன். என்னைப் பற்றியதாக நினைப்பதில்லை. எனவே என்னைப் பற்றிய உண்மைகளை அவர்களிடம் பகிர்கிறேன்.


https://ondigitalshop.com/wp-content/uploads/2021/04/AAAABXB0h7ew6PlcB3CGBNSyCnLTEuru1hFW2h4nEtpMZIjMWeNvYyFC4rwEFKZ0SkoI35mjwPpvcTLc57J_jnxHEOUZlK6NwWciHpKkP5w-CqXzT3fBi4nLdXyuk7ol_g.jpg 

 

கம்யூனிட்டி சார்ந்த பல்வேறு சர்ச்சைகள் உண்டு. நீங்கள் ஓஷோவுடன் அதிக நேரம் செலவிட்டதாக நினைக்கிறீர்களா?


அப்படி எது நடந்திருந்தாலும் அது நேரப்படி சரியாகவே நடந்தது. இதில் இப்படி நடந்திருந்தால், ஆனால் என்ற கேள்விக்கு இடமில்லை. வாழ்க்கையில் வரும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் அதன்போக்கில் அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நான் அதைத்தான் செய்தேன். இந்த ஆவணப்படத்தை இயக்கும் சாகுன் பத்ராவுக்கு அவரது அறிவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.


இத்தனை ஆண்டுகளும் ஏராளமான விமர்சனங்களை கண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு மனதில் கோபம் இருக்கிறதா?


என் மனதில் இப்போது கோபம் இல்லை. மக்கள் தங்களுக்கான கருத்தை வெளிப்படையாக கூற சுதந்திரம் உள்ளது. அது அவர்களைப் பற்றியதுதான். நான் மக்களின் கருத்துகளை வைத்து அவர்களை முடிவு செய்யவில்லை. எனவே எனக்கு அவர்களை ஏற்பது கடினமாக இல்லை.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


கோபிநாத் ராஜேந்திரன்



கருத்துகள்