இடுகைகள்

மருத்துவம்- செயற்கை இனிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை இனிப்பு என்ன செய்யும்?

படம்
செயற்கை இனிப்பின் அச்சுறுத்தல் ! டயட் என்றதும் முதலில் சர்க்கரையை தவிர்த்து செயற்கை இனிப்பை தேர்ந்தெடுப்பதே புதிய ஸ்டைல் . ஆனால் அது சரியானதா என்பதே பலரின் கேள்வி . சூயிங்கம் , குளிர்பானங்கள் , ஜெல்லி , மிட்டாய்கள் உள்ளிட்டவற்றில் இடம்பெறும் செயற்கை இனிப்புகளை சுவை உணரும் திறன்களை அழித்துவிடும் என அச்சுறுத்துகிறது வல்லுநர் வட்டாரம் . " நீரிழிவு , உடல்பருமன் , இதயநோய் பிரச்னையுள்ளவர்கள் செயற்கை இனிப்பை ( Aspartame, Sucralose, Saccharin, Acesulfame Potassium   Stevia) மாற்றாக தேர்ந்தெடுக்கின்றனர் . ஆனால் இவை நாக்கின் சுவைமொட்டுக்களை அழித்து பழங்கள் சாப்பிட்டால் கூட அதன் சுவையை அறியமுடியாமல் செய்துவிடும் " என்கிறார் ஆயுர்வேத மருத்துவரான முகமது யூசுப் என் . ஷேக் . இதற்கு ஒரே தீர்ப்பு , கருப்பட்டி , வெல்லம் , தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை மட்டுமே . செயற்கை இனிப்பு கலந்த பொருட்களை உண்பதால்   ஒற்றைத்தலைவலி , வாந்தி , குமட்டல் , உடல்பருமன் ஆகிய பிரச்னைகள் ஏற்படும் என்பது உணவு வல்லுநர்களின் வாக்கு . இயற்கைக்கு திரும்புவது உடலின் இயல்புக்கு நல்லது .