இடுகைகள்

கருணை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோபாத் கொலைகாரனுக்கு விபத்தில் நினைவுகள் அழிந்து, மீண்டும் நினைவுகள் திரும்பினால் - மவுஸ்

படம்
  மவுஸ் - கே டிராமா மவுஸ் கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   வன்மம் கொண்ட ஆபத்தான சீரியல் கொலைகாரனை கொரிய போலீஸ் தேடி வருகிறது. ஆனால், அவனோ அவர்களுக்கு ஒரு படி முன்னே சென்றுகொண்டே இருக்கிறான். அவனை பிடிக்கும் முயற்சியில் ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள். அவர்களைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதரவற்றவையாக மாறுகின்றன. சீரியல் கொலைகாரர்களால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்த போலீஸ்காரர்   துணிச்சலாக களமிறங்க, அவருக்கு சைக்கோபாத் கொலைகாரன் சவால் விட ஊடகங்கள் இடைத்தரகர்களாக மாற என்னவானது என்பதே கதை. மேலே சொன்னது கதையின் ஆதாரமான பகுதி அல்ல. பொதுவாக சைக்கோபாத்/ தொடர் கொலைகாரர்கள் கதையில் பூனை – எலி விளையாட்டு போல ஓடுதல், தப்பித்தல், வேட்டையாடுதல் எல்லாமே உண்டு. இந்த கதையிலும் அதெல்லாம் உண்டுதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்த டிவி தொடர் பேசும் விஷயம் சற்று சர்ச்சையானது. இங்கிலாந்தில் படித்து ஆராய்ச்சி செய்யும் மருத்துவர், டேனியல் கொரியாவை பூர்விகமாக கொண்டவர். இவர். சியோ ஹன் என்ற மூளை அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அடையாளம் காணப்பட்டு புகழ்பெறுகிறார். மூளை தொடர்பான ஆய்வ

கொலையாளியின் இனம்புரியாத வசீகரம்

படம்
  சைக்கோபதி செக்லிஸ்டை ஒருவர் பயன்படுத்தினால் அதை பரிசீலிக்க தகுதிபெற்ற உளவியலாளர் தேவை. இல்லாதபோது நிறைய குழப்பங்கள் ஏற்படும். சாதாரணமாக நீங்கள் பார்ப்பவரிடம் செக்லிஸ்டில் உள்ள சில அறிகுறிகள் காணப்படலாம். அதற்காக அவர் சைக்கோபாத் ஆகிவிட மாட்டார். சைக்கோபாத் என்ற வார்த்தைக்கு கூட்டாக நிறைய அறிகுறிகள் உள்ளடங்கும். மயக்கும் வசீகரம் சைக்கோபாத்கள் சூரியனுக்கு கீழே உள்ள அனைத்து விஷயங்களும் தெரியும் என நினைப்பார்கள். தான் ஒருவரை கவர வேண்டும், அவரால் காரியம் ஆக வேண்டுமென்றால் அவர்கள் துறை சார்ந்த சொற்களை, வார்த்தைகளை, ஆளுமைகளைப் பற்றி பேசுவார்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது ஒருவரை கவர்ந்து தான் சொன்னபடி செய்யவைக்க வேண்டும் என்பதுதான். எனவே நாடகங்களில் மனப்பாடம் செய்து குழந்தைகள் ஒப்பிப்பார்களே அப்படி பேசுவார்கள். முகத்திற்கு முன்னாடியே   புகழ்ந்து ஒருவரை வீழ்த்துவது, புகழ் வெளிச்சம் கிடைப்பதற்காக தன்னை மேதாவியாக பாவித்து பேசுவது ஆகியவற்றை செய்வார்கள்.     எக்கோஸ் இன் தி டார்க்னெஸ் என்ற நாவலில் ஜோசப் வாம்பாக் உருவாக்கிய வில்லியல் பிராட்ஃபீல்ட் என்ற பாத்திரம் சைக்போபாத்தான். இவர் அனைவரிட

பூஜை செய்வதும், மந்திரங்கள் ஓதுவதும் ஏற்படுத்தும் விளைவுகள்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நான் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் கல்லூரி முதல்வர் அதற்கு மறுக்கிறார். நான் அவர் கூறியதை மறுத்தால் நிறைய பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். அதேசமயம் நான் அவர் கூறியதைப் பின்பற்றினால், எனது இதயம் உடைந்துபோகும். இப்போது நான் என்ன செய்வது? நீங்கள் உங்களின் பிரச்னையான நிலையை முதல்வரிடம் எடுத்துச் சொல்ல நம்பிக்கை இல்லாத நிலையைப்   பற்றி கூறுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அவரிடம் உங்கள் பிரச்னை பற்றி பேசுங்கள். நீங்கள் உங்களது நிலையைப் பற்றிக் கூறியும் கூட அவர்   தனது நிலையில் பிடிவாதமாக இருந்தால், அவரிடம்தான் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் அப்படி உங்கள் கோரிக்கையை நிராகரிப்பதற்கு கூட அவரிடம் சில காரணங்கள் இருக்கலாம். அதை நீங்கள் கண்டறிய வேண்டும். இங்கு இருதரப்பிலும் நம்பிக்கை தேவைப்படுகிறது. முதல்வர், மாணவரான நீங்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை வேண்டும்.   வாழ்க்கை என்பது ஒரு பக்கம் சார்ந்த உறவு கிடையாது. முதல்வர், மாணவர் என நீங்கள் இருவருமே மனிதர்கள். எனவே இருவருமே தவறு செய்ய வாய்ப்புள்ளவர்கள்தான

பழங்குடி மனிதன் குல்லுபாயை துரத்த அலையும் மாபியா குழு! குலு குலு - ரத்னகுமார்

படம்
  குலுகுலு சந்தானம், பிரதீப் ராவத், தீனா இசை சந்தோஷ் நாராயணன் இயக்கம் ரத்னகுமார் மதிமாறன் என்ற இளைஞன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஊருக்கு வருகிறான். அவனுக்கு அப்பா தன் மீது பாசம் காட்டவில்லை என்று வருத்தம். இதனால் தான் கடத்தப்பட்டது போல நாடகமாடுகிறான். இதில், ஏற்படும் குளறுபடிகளால் மதிமாறனை இலங்கை தமிழ் ஆட்கள் கடத்திப் போகிறார்கள். இவர்களை மீட்க ஊருக்கே உதவி செய்யும் கூகுள் என்பவரை மதிமாறனின் நண்பர்கள் தேடிப்போகிறார்கள். அதேநேரம் டேவிட், ராபர்ட் என்ற மாபியா கும்பல், இறந்துபோன தந்தைக்கு பிறந்த பெண்ணை அதாவது அவர்களது தங்கையை தேடிப்பிடித்து கொல்ல  நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்திப்பதுதான் படத்தின் இறுதிக் காட்சி.   கூகுள் என்ற குல்லு பாய் ஆக சந்தானம் நடித்திருக்கிறார். படம் நெடுக அவல நகைச்சுவை அதிகம். அதில் பெரும்பகுதி குல்லு பாயின் செயல்களை ஒட்டித்தான் நடக்கிறது. அமேசான் மழைக்காட்டிலிருந்து வந்த பழங்குடி மனிதன். மொழியை தொலைத்துவிட்டு அந்த வருத்தம் தாளாமல் மதிமாறனின் நண்பர்களோடு அழுவது உருக்கமான காட்சி. பாடல்களில் எல்லாம் வெடிக்கும் நகைச்சுவை  இசைக்கு சந்தோஷ் நார

வீடற்றவர்கள், அகதிகளுக்காக உணவகம் தொடங்கி நடத்தும் சமையல்கலைஞர்!

படம்
  சமையல் கலைஞர் மாசிமோ பொட்டுரா உணவை வீணாக்காத சமையல்கலைஞர்!  மாசிமோ பொட்டுரா, புகழ்பெற்ற சமையல்கலைஞர். இவர் இத்தாலியில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். இவரது உணவு தயாரிப்பு என்பது, அன்று கடைக்கு வரும் காய்கறிகளைப் பொறுத்ததுதான். ஒருநாள் கோழிக்கறியும், ஆரஞ்சுப்பழங்களும் கிடைக்கிறது என்றால் அவற்றை வைத்து உணவு வகைகளை உருவாக்குகிறார்.  இந்த வகையில் உணவுப்பொருட்களை வீணாக்காமல் இருக்க  தனி உணவகங்களை தொடங்கியுள்ளார். இதன் பெயர், ரெஃபெடோரியோ அம்புரோசியானோ. உலகம் முழுக்க 13 உணவகங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவற்றை உண்மையில் சூப்களை செய்யும் இடம் என்றே அழைக்கவேண்டும்.ஆனால் பொட்டுரோ அதனை அப்படி அழைப்பதில்லை.  அகதிகள், வேலையற்றவர்கள், வீடற்றவர்கள் ஆகியோருக்கு இலவச உணவுகளை தனது உணவகத்தில் வழங்கி வருகிறார். இலவசமாக கொடுத்தாலும் உணவு உண்ண வருபவர்களை கௌரவமாக நடத்தவேண்டும் என எண்ணுகிறார். தனது உணவகத்தில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களிடமும் பொட்டுரோ பொருட்களை முடிந்தளவு வீணாக்காமல் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.   “ உணவு வீணாவதை எனது பாட்டி எப்போதும் விரும்பியதில்லை. அதற்கு தீர்

பள்ளிக்காலத் தோழியைத் தேடி அலையும் கஞ்சத்தனமான தொழிலதிபரும், பிடிஎஸ்டி காதலியும்! - மை கேர்ள்

படம்
              மை கேர்ள் சீன டிவி தொடர் எல்எஸ் என்ற அழகுசாதன நிறுவனத்தை நடத்தும் கஞ்சத்தனமான தொழிலதிபருக்கு பிடிஎஸ்டி பிரச்னை கொண்ட காதலி கிடைக்கிறார் . இதனால் அவரது வாழ்க்கை என்னவானது என்பதுதான் கதை . கொரிய , ஜப்பானிய , சீன தொடர்களில் சீரியசாக செல்லும் காட்சிக்ளில் கூட ஜிலீர் காமெடி வந்துவிடுகிறது . இதனால் , தொடரை பெரிதாக வருத்தப்பட்டு பார்த்து கண்ணீர் சிந்தவேண்டியதில்லை . எது நடந்தாலும் லாஸ்டில் சுபமாக முடிச்சுருவாங்கப்பா என நிம்மதியாக பார்க்கலாம் . மை கேர்ள் தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல . ஷென் யி , மென் குயி என்ற இரண்டு பள்ளிப்பருவத் தோழன் , தோழி இருக்கிறார்கள் . இவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள் . அப்போது ஷென் யி வறுமையான நிலையில் இருக்கிறார் . இதனால் பள்ளி பேக் கூட வாங்கமுடியாத நிலை . அவரது அம்மா , தந்தையை விட்டு பிரிந்து வந்து தனியாக வாழ்கிறார் . அவர் நோயாளியும் கூட . ஷென் யிக்கு மதிய உணவு கூட ஒரே மாதிரியாகத்தான் வீட்டில் செய்து தருகிறார்கள் . அவனுக்கு தனது தட்டில் இருந்து உணவை எடுத்து கொடுக்கிறாள் மென் குயி . இப்படித்தொடரும் இவர்கள

மாடுகளை வதைக்கின்றனவா பால் பண்ணைகள்? - வலுப்படும் எதிர்ப்புகள்

படம்
  உலகம் முழுவதும் உள்ள பால் பண்ணைகளுக்கு எதிராக பல்வேறு விலங்கு நல அமைப்புகள் போராடி வருகின்றன.  உலகநாடுகளில் இயங்கி வரும் பால் பண்ணைகள் மூலம்தான் பதப்படுத்தப்பட்ட பால், ஐஸ்க்ரீம், யோகர்ட், வெண்ணெய், நெய், சீஸ், பனீர் ஆகிய பால் பொருட்கள் கிடைக்கின்றன. மிதமிஞ்சிய பாலை பால் பௌடராக மாற்றி உலகச்சந்தையில் பல்வேறு நாடுகளும் விற்பனை செய்து வருகின்றன.  பால் பண்ணைகளில் உற்பத்தி குறையாமலிருக்க பசுக்கள் செயற்கை முறையில் சினையூட்டம் பெற்று கன்றுகளை ஈனுகின்றன. பசுக்களின் பராமரிப்பு, இயற்கையான முறை அல்லாமல் செயற்கையான சினையூட்டப்படுவது, கிடாரிக்கன்றுகளை வைத்துக்கொண்டு கிடாய்களை இறைச்சிக்கு விற்றுவிடுவது ஆகியவற்றுக்கு எதிராக விலங்குநல ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.  அமெரிக்காவில் பால்துறை சந்தை தோராயமாக 60 ஆயிரம் கோடிக்கும் அதிகம். அங்கு  மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையும் பெரியது. இருபது ஆண்டுகாலம் வாழும் பசு, ஐந்து ஆண்டுகளிலேயே பால் வளத்தை இழந்து, இறைச்சிக்காக விற்கப்பட்டுவிடுகின்றன. பால் வளமின்றி வளர்ப்பது விவசாயிகளுக்கு சுமை என்று கூறப்படுகிறது. ’’இங்கு பெறப்படும் பால் என்பது வன்முறையின

யசவந்தன் என்ற மனிதரைப் பற்றிய எழுத்தாளர் அறியும் பிம்பங்கள்! - அழிந்தபிறகு - சிவராம காரந்த், கன்னட நாவல்

படம்
        சிவராம காரந்த் அழிந்த பிறகு சிவராம காரந்த் சாகித்ய அகாதெமி பம்பாயில் வாழும் யசவந்தர் என்பவரின் தந்தி எழுத்தாளரின் வீட்டுக்கு வருகிறது. அவருக்கு உடல்நலம் குன்றி இருப்பதாகவும், அவரை  வந்து பார்க்கும்படியும் அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் எழுத்தாளரால் சரியான நேரத்திற்கு யசவந்தரை சென்று பார்க்கமுடியவில்லை. இதன் காரணமாக தாமதமாக செல்கிறார். அங்கு சென்று பார்த்தால், அவர் மருத்துவமனையில் இறந்து சடலமாக கிடைக்கிறார். அவருக்கு இறுதிச்சடங்குசெய்து முடித்தபிறகு பார்த்தால், அவரது அறையில் உள்ள கடிதங்கள், வீட்டுக்கு அனுப்பிய கடிதம் ஆகியவற்றை படிக்கிறார். அதன் வழியே யசவந்தர் யார் என்பதை எழுத்தாளர் அறிந்துகொள்வதுதான் கதை. நாவல் முழுவதும் யசவந்தர் என்ற மனிதர் யார் எப்படிப்பட்டவர் என்பதை பல்வேறு மனிதர்களின் கருத்துகள், விவரிப்பு மூலமே சொல்லியிருக்கிறார். ஆசிரியர். யாருக்கேனும் துயரம் என்றால் தன்னையுமறியாமல் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும் மனிதர்தான் யசவந்தர். அவர் ஒருகாலத்தில் தனது தந்தை, தாத்தா வழி சொத்துக்களை பிறருக்கு கொடுத்தே அழிக்கிறார். பின்னாளில் திருமணமாகும்போது சொத்துக்களை பாடுபட்டு சேர்

ஆசையை துறக்கும் உலகின் சிறந்த வாள் வீரன்! - தி வாரியர்ஸ் வே

படம்
வாரியர்ஸ் வே -கொரியா(2010) இயக்கம் –லீ சியூங்மூ ஒளிப்பதிவு - வூ ஹியூங் கிம் இசை ஜேவியர் நவரெட்டே உலகில் மிகச்சிறந்த வாள் வீரனாக ஆசைப்படும் வீரன் ஒருவனின் கதை. அவனுக்குள் இருக்கும் கருணை உணர்வு அவனை வீழ்த்திவிடும் என அவனது குரு எச்சரிக்கிறார். அதையும் மீறி எதிரிப்படையினரைச் சேர்ந்த குழந்தை ஒன்றை எடுத்து வளர்க்கிறான்.  அது அவரது குருவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர் தன் சீடன் கொன்ற ஆட்களைத் தவிர்த்த மீதி ஆட்களைத் திரட்டிக்கொண்டு அவனை பின்தொடர்கிறார். நாயகன் குழந்தையை எடுத்துக்கொண்டு தனது நண்பன் வாழ்ந்த ஊரை நோக்கிப் போகிறான். அங்கு நண்பன் இல்லை. ஆனால் அவன் நடத்திவந்த விடுதி இருக்கிறது. அங்கேயே தங்கும்போதுதான் அங்கு அடிக்கடி வந்து பொருட்களையும் பெண்களையும் கொள்ளையடித்துப்போகும் படைவீரன் ஒருவனைப் பற்றி தெரிய வருகிறது. அவனைப் பழிவாங்க துடிக்கும் இளம்பெண்ணுக்கு நாயகன் உதவுகிறான். அந்த ஊரின் பிரச்னையில் தலையிட வேண்டாம் என்றாலும் சூழல் அவனை விடுவதாக இல்லை. இந்த நிலையில் அவன் அந்த ஊர் மக்களைக் காப்பாற்றினானா? இளம்பெண் தன் அப்பாவைக் கொன்றவனை பழிவாங்