இடுகைகள்

வேலைவாய்ப்பு சரிவு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பு எங்கே?

அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி; சரியும் வேலைவாய்ப்புகள்? – நான்காவது தொழில்துறை புரட்சியின் தொடக்கத்தில் இந்தியா பெருமையாக வளர்ச்சியின்றி நிற்கிறது. 1972-77 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 4.6% எனில் அதன் விளைவாக நமக்கு கிடைத்த வேலைவாய்ப்பு சதவிகிதம் 2.6%. ஆனால் 2011-15 ஆம் ஆண்டுகளில் 6.8 சதவிகிதம் பொருளாதாரம் வளர்ந்தாலும் வேலைவாய்ப்புகளின் அளவு 0.6% என தேய்ந்துவருகிறது. என்ன காரணம்? நாம் இருகரம் கூப்பி வரவேற்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களும், அதை கற்றுக்கொள்ளாத தொழில்துறையும்தான். இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், பிளாக்செயின், ஆட்டோமோஷன், மெஷின் லேர்னிங் என அனைத்து டெக் நுட்பங்களும் ஒன்றுக்கொன்று கைகோர்க்க தொழிற்சாலைகளில் மனிதர்களின் தேவை பெருமளவு குறைந்து உற்பத்திப்பொருட்கள் டன்கணக்கில் அதிகரித்திருக்கிறது. விளைவு? உலகளவில் வேலைவாய்ப்புகள் 15 சதவிகிதம் குறையும். இந்தியாவின் பங்கு 9%.   2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர்களை எட்டவிருக்கும் நிலையில் இந்திய தொழில்துறையினர் துறைரீதியிலான அறிவை பெறாவிட்டால் வேலையிழப்பு நிச்சயம் என உலக பொருளாதார அமைப்பு எச்சர