இடுகைகள்

கன்சர்வேட்டிவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரெக்ஸிட் குழப்பங்கள்!

படம்
ozy பிரெக்ஸிட் சாத்தியமாகுமா? இரண்டே வாரங்கள்.இங்கிலாந்து, ஐரோப்பியா யூனியனிலிருந்து பிரியவிருக்கிறது. ஆனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரியும் மசோதா, முதலில் ஆரவாரமாக தொடங்கினாலும் பின்னால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்தவர்கள் மெல்ல பின்வாங்கத் தொடங்கினர். பிரெக்ஸிட்டைத் திரும்ப பெறும் மசோதாவிலும் தோல்வியைச் சந்தித்துள்ளார். என்ன காரணம், பிரெக்ஸிட் சாத்தியமானால், நாட்டின் உணவு, தொழில்துறை என அனைத்தும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இப்போது தெரசாவின் அரசு அட்டர்னி ஜெனரல் ஜியோப்ரி காக்ஸ் இதற்கு பெரிய ஆர்வம் தெரிவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெரசா மே, பிரெக்ஸிட் மசோதாவை உருவாக்கினார். மார்ச் 29, 2019 அன்று விலகும் என்பது திட்டம். நாடாளுமன்றம் இன்னும் இதில் தெளிவாகவில்லை. இன்னும் காலதாமதம் ஆனால், அதற்கும் நாடுகள் ஒப்புதல் தருவது அவசியம். இதற்கு தெரசா மே, ஐரோப்பிய யூனியனை அணுகக்கூடும். மிக அதிக காலம் ஐரோப்பிய யூனியன் அளிக்க வாய்ப்பில்லை. அதிகபட்சமாக மே 24 முடிவாகும் வாய்ப்புண்டு. அதற்குப்பிறகு ஐரோப்பிய யூனியனுக்கு தேர்தல் வேலைகள் தொடங்கிவிடும். ஆனால் இதில் இங்கிலாந்