இடுகைகள்

கடத்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் திருந்தி வாழ நினைக்கும்போது ஏற்படும் விளைவுகள்!

படம்
  உள்ளத்தில் நல்ல உள்ளம்  விஜயகாந்த், ராதா, ராதாரவி, வினுசக்ரவர்த்தி இயக்கம் மணிவண்ணன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நைனாவின் உதவியால் கள்ளக்கடத்தல் தொழிலுக்குள் நுழையும் ஒருவன், காதல்வயப்பட்டு தனது தொழிலை கைவிட முயன்றால் என்ன நடக்கும் என்பதே கதை.  சுபமாக முடியும் கதை கிடையாது. அதை முதலிலேயே கூறிவிடுகிறேன். படத்தில் அந்தமோசமான முடிவுக்கு நைனா பாத்திரம் மூலம் ஏற்கெனவே நம்மை தயார்படுத்திவிடுகிறார்கள். அதனால் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை, மைக்கேல்ராஜ் என்பவர், கடலை ஒட்டியுள்ள ஊரில் கள்ளக்கடத்தல் செய்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கிறார். இதனால் அவர் செய்வதை காவல்துறை கண்டுகொள்வதில்லை. அங்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஷீலா இதை தடுக்க நினைக்கிறார். இவரை மைக்கேல்ராஜ் பெரிதாக தடுக்கநினைப்பதில்லை. கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறார். உண்மையில் அவர் யார் என்பது சற்று சுவாரசியமாக உள்ளது.  நைனாவிடம் தொழில் கற்றவரான மைக்கேல் ராஜ், தான்செய்யும் தொழிலை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.இறுதியாக அவரோடு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த, இப்போதைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள ஷீலா சொல்

செம்மரக்கடத்தலில் கொல்லப்படும் நபர்களை தேடிப்போகும் உதவி கலெக்டர்!

படம்
  ராமாராவ் ஆன் டூட்டி 2022 தெலுங்கு ராமாராவ் ஆன் டூட்டி தெலுங்கு ரவிதேஜா, நாசர்,திவ்யான்சா கௌசிக்   படத்தின் தொடக்க காட்சியில் வயதான முதியவர் இறந்துபோன ஆளை யாருக்கும் தெரியாமல் மண்ணைத் தோண்டிப் போட்டு புதைக்கிறார். இதற்கடுத்து, உதவி கலெக்டரான ராமாராவின் அதிரிபுதிரி அறிமுக காட்சி. படம் முழுக்க குற்றச்சம்பவங்கள், அதை எப்படி செய்கிறார்கள், அதில் காவல்துறையின் ஈடுபாடு என ஆழமாக சென்று பேசுகிறது. படத்தில் ராமாராவின் மனைவி, அவரது முன்னாள் காதலி என இரண்டுபேர் இருந்தாலும் நடிப்பதற்கான வாய்ப்பு முன்னாள் காதலியான மாலினிக்கே உள்ளது. சற்று உள்ளடங்கிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய நடிப்பு என்றாலும் அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். ராமாராவ் பாத்திரம், மாலினியின் கட்டாய திருமணத்தை புரிந்துகொள்ளும் விதம் முதிர்ச்சியானது. பின்னணி இசை என்றாலே ஒருவர் கர்ண கடூரமாக அலறுவது என சாம் சிஎஸ் புரிந்துகொண்டிருக்கிறாரா என்ன? இசைக்கருவிகளை சிறப்பாக பயன்படுத்தினாலே போதுமானது என தோன்றுகிறது. காதில் அந்தளவு இரைச்சல் கேட்கிறது. சமகால இசைக்கலைஞர்கள் எல்லோருமே இசைக்கலைஞர் அனிருத்தைப் பின்பற்றுகிறார்கள் போல… ப

சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு கொல்லப்பட்ட மர்மம்! ஆம்பர் ஹாகர்மன்

படம்
  சிறுமி ஆம்பர் ஹாகர்மன் டெக்ஸாஸின் ஆர்லிங்க்டன் பகுதியில் இருந்த தாத்தாவின் வீட்டில் ஆம்பர் ஹாகர்மன் வாழ்ந்து வந்தார். வீட்டுக்கு அருகில், ஒன்பது வயது சிறுமியான ஆம்பர், தனது ஐந்து வயது சகோதரன் ரிக்கியுடன் சைக்கிளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். 1996ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று, கைவிடப்பட்ட வின் டிக்ஸி என்ற காய்கறிக்கடையின் பார்க்கிங் பகுதியில்தான் ஆம்பர் காணாமல் போனார். எப்போதும் போல அங்கு தனது சகோதரனுடன் சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் அடையாளம் தெரியாத மனிதர் மூலம் கடத்தப்பட்டார். அப்படித்தான் அங்குள்ளவர்கள் காவல்துறையில் தகவல் சொன்னார்கள். கருப்பு நிற பிக் அப் காரில் வந்த மனிதர் ஆம்பரை சைக்கிளில் இருந்து கடத்திச்சென்றார் என வயதான தம்பதியினர் 911 என்ற எண்ணுக்கு டயல் செய்து தகவல் சொன்னார்கள். காவல்துறை அதிகாரிகள் வரும்போது, அங்கு ஆம்பரின் அடையாளம் ஏதுமில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு ஆம்பரின் இறந்துபோன உடல் கண்டெடுக்கப்பட்டது. நாயுடன் வாக்கிங் சென்றவர், கடத்தப்பட்ட இடத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் இருந்த இடத்தில் ஆம்பரின் உடல் கிடப்பதை காவல்துறைக்கு தகவல்

குளத்தில் இருந்து காணாமல் போன இளம்பெண்! - இருபது ஆண்டுகளாக தேடிவரும் காவல்துறை

படம்
  மோலி பிஷ் மசாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள வாரன் பகுதியைச் சேர்ந்தவர் மோலி பிஷ். இவர், 2000ஆம் ஆண்டில்   சிறுவர்கள் குளிக்கும் குளம் ஒன்றில் லைஃப் கார்டாக வேலை செய்துகொண்டிருக்கும்போது காணாமல் போனார், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த நீலநிற நீச்சலுடை மட்டுமே காவல்துறைக்கு கிடைத்தது. ஆனால் அவரது உடல் அல்லது வேறு பொருட்கள் என எதுவுமே கிடைக்கவில்லை. மோலியின் குடும்பத்தினர், காணாமல் போன மகளின் பெயரில் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி, குழந்தைகளை கண்காணிக்கவென சில பொருட்களை பெற்றோருக்கு வழங்கி வருகின்றனர். மகள் தொடர்பான வழக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. கமின்ஸ் என்ற குளத்தில் மோலியின் சகோதரர் ஜான் லைஃப் கார்டாக   வேலை செய்து வந்தார். எனவே, பள்ளியில் படித்து வந்த மோலிக்கு பதினாறு வயதில் தானும் லைஃப் கார்டாக வேலை செய்யவேண்டுமென ஆசை பிறந்தது. ஆனால் வேலைக்கு சேர்ந்த எட்டே நாட்களில் காணாமல் போய்விட்டார். அம்மா மேகிக்கு, மகள் ஆபத்தான இடத்தில் வேலை செய்கிறாளே என பயம் இருந்தும் மகள் உறுதியாக கூறியதால் மனதை சமாதானம் செய்துகொண்டார். ஆனால் அது நிலைக்காது என அவரும் கூட நினைத்த

தங்க கடத்தல்காரர் எப்படி இறந்தார் என்று கண்டறியும் காவல்துறை! தங்கம் - வினீத் சீனிவாசன், அபர்ணா

படம்
  தங்கம் மலையாளம்  தங்கம்  தங்கம் மலையாளம் வினீத் சீனிவாசன், அபர்ணா, கலையரசன் கேரளத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து மும்பையில் விற்று சம்பாதிக்கிறார்கள் என்பதே கதை. ஒன்லைனாக கதை நன்றாக இருந்தாலும் சொன்ன விதம் முழுக்க விசாரணை சமாச்சாரமாக இருப்பதால் ஒருகட்டத்தில் படம் எப்போது முடியும் என்று எண்ணம் தோன்றுகிறது. தவிர்க்கமுடியவில்லை. தங்கத்தை நில மார்க்கமாக மும்பைக்கு கடத்தி சென்று விற்று வருவதுதான் வினீத் சீனிவாசன் குழுவின் திட்டம். ஆனால் ஒருமுறை இப்படி செல்லும்போது தமிழகத்தில் முத்துப்பேட்டை அருகே மாட்டிக்கொள்கிறார் சீனிவாசன். அதிலிருந்து மீண்டவர் மும்பைக்கு செல்கிறார். ஆனால் சில நாட்களிலேயே அவரிடமிருந்து எந்த தகவலும் வருவதில்லை. என்ன ஆனது என விசாரிக்கும் வினீத் சீனிவாசனின் நண்பர் குழு மும்பைக்கு செல்கிறது. பார்த்தால் வினீத் அறையில் தூக்கில் தொங்கி இறந்திருக்கிறார். ஆனால் அறையில் போராட்டம் நடந்திருப்பது போல தெரிகிறது. எனவே, மகாராஷ்டிரா போலீசார், வினீத்தின் நண்பரிடம், நீங்கள் உண்மையை அறிய நினைத்தால் நாங்கள் உதவுகிறோம். ஆனால் நாங்கள் கேரளத்திற்கு வந்தால் அந்த செலவை நீங்கள் ஏற்க

அரசு வழக்குரைஞரை சிறையில் தள்ளி நினைவிழப்புக்கு ஆட்படுத்தும் சைக்கோ! - இன்னோசன்ட் டெஃபென்டெண்ட்

படம்
  இன்னொசென்ட் டிஃபென்டண்ட் ஜி சங், உம் கி ஜூன், ஜோ ஜே யூன் தென்கொரிய டிவி தொடர் 18 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்   பார்க் ஜூங்கு( ஜி சங்) என்பவர் அரசு வழக்குரைஞர். இவர் பெரு நிறுவனமான சோமியாங் குழுமத்தின் இயக்குநராக உள்ள சுன்கோ என்பவரின் தம்பி மின்கோவை கொலைக்குற்றத்திற்காக கைது செய்ய முயல்கிறார். ஆனால் இந்த முயற்சியால், பார்க் ஜூங்கு அவரது மனைவியை கொன்றார் என குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கூடுதலாக அவரை சிறை அதிகாரிகள் தனிமை அறையில் போட்டு சித்திரவதை செய்ய அவர் நினைவிழப்பு பிரச்னைக்குள்ளாகிறார். இதனால் வழக்கு தாமதமாகிறது. பார்க் ஜூங்கு நேர்மையான வழக்குரைஞர். எனவே, வழக்குரைஞர் துறையில் அவருக்கு எதிராக பெரும் சதிகள் நடைபெறுகின்றன. அவரது நண்பனே பணத்திற்கும், ஐ.நா கௌன்சிலில் கொரிய வழக்குரைஞர் என்ற பதவிக்கு ஆசைப்பட்டு ஜூங்குவை குற்றவாளியாக்குகிறான். மரணதண்டனை பெற்றுத் தரவும் தயங்குவதில்லை. இந்த நிலையில் பார்க் ஜூங்குவிற்காக பொது வழக்குரைஞராக இளம் பெண் வழக்குரைஞர் வாதாட வருகிறார். அவர் பார்க் ஜூங்குவிடம் ஏற்கெனவே வழக்கில் தோற்றவர். ஆனால் வழக்கில் ஏதோவொன்று ஈர்

பழங்குடி மனிதன் குல்லுபாயை துரத்த அலையும் மாபியா குழு! குலு குலு - ரத்னகுமார்

படம்
  குலுகுலு சந்தானம், பிரதீப் ராவத், தீனா இசை சந்தோஷ் நாராயணன் இயக்கம் ரத்னகுமார் மதிமாறன் என்ற இளைஞன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஊருக்கு வருகிறான். அவனுக்கு அப்பா தன் மீது பாசம் காட்டவில்லை என்று வருத்தம். இதனால் தான் கடத்தப்பட்டது போல நாடகமாடுகிறான். இதில், ஏற்படும் குளறுபடிகளால் மதிமாறனை இலங்கை தமிழ் ஆட்கள் கடத்திப் போகிறார்கள். இவர்களை மீட்க ஊருக்கே உதவி செய்யும் கூகுள் என்பவரை மதிமாறனின் நண்பர்கள் தேடிப்போகிறார்கள். அதேநேரம் டேவிட், ராபர்ட் என்ற மாபியா கும்பல், இறந்துபோன தந்தைக்கு பிறந்த பெண்ணை அதாவது அவர்களது தங்கையை தேடிப்பிடித்து கொல்ல  நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்திப்பதுதான் படத்தின் இறுதிக் காட்சி.   கூகுள் என்ற குல்லு பாய் ஆக சந்தானம் நடித்திருக்கிறார். படம் நெடுக அவல நகைச்சுவை அதிகம். அதில் பெரும்பகுதி குல்லு பாயின் செயல்களை ஒட்டித்தான் நடக்கிறது. அமேசான் மழைக்காட்டிலிருந்து வந்த பழங்குடி மனிதன். மொழியை தொலைத்துவிட்டு அந்த வருத்தம் தாளாமல் மதிமாறனின் நண்பர்களோடு அழுவது உருக்கமான காட்சி. பாடல்களில் எல்லாம் வெடிக்கும் நகைச்சுவை  இசைக்கு சந்தோஷ் நார

குழந்தை கடத்தப்பட அவளை மீட்கப் போராடும் தாயின் கதை! - 400 டேஸ் - சேட்டன் பகத்

படம்
  400 டேஸ்  சேட்டன் பகத் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் சியா அரோரா என்ற பதிமூன்று வயது சிறுமி கடத்தப்படுகிறாள். அவள் காணாமல் போய்விட அவளது குடும்பம் படும் துயரமும் அதை தீர்க்க சியாவின் அம்மா ஆலியா அரோரா எடுக்கும் முயற்சிகளும் தான்  கதை.  பெடோபில்லே என சொல்லுவார்கள். குழந்தைகளை கடத்தி அவர்களை வல்லுறவு செய்யும் மனிதர்கள்... அவர்களைப் பற்றியதுதான் கதை. இதனால் 400 டேஸ் என்ற ஆங்கில நூல் முக்கியத்துவம் பெறுகிறது.  இந்த நாவலிலும் சேட்டன் பகத்தின் யூஷூவலான அத்தனை அம்சங்களும் உண்டு. காதல், மோதல், செக்ஸ், நட்பு, (கணவன், மனைவிக்கு இடையிலான மோதல், குடும்ப பிரச்னை, உணவு ஆகியவை எல்லாம் புதியது).  கதையில் முக்கியப் பாத்திரங்கள் கேஷவ் ராஜ் புரோகித் , சௌரப் மகேஷ்வரி, ஆலியா அரோரா, மணிஷ் அரோரா, புரோகிதர் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் சௌதாலா, சப் இன்ஸ்பெக்டர் வீரென், சியா அரோரா, குட்டி பாப்பா சுகானா அரோரா.  கேஷவ் ராஜ்புரோகித்தின் வாழ்க்கையைத் தான் சேட்டன் தொடக்கத்தில் மெதுவாகச் சொல்லுகிறார். குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் வாலிபர். கூடவே வயது 30 என்பதால் கேஷவின் பெற்றோர், அவருக்கு கல்யாணம் பார்த்து வைக்க அலைபாய்

பணத்தை விட மதிப்பான பொருளைத் தேடும் நாயகன்! - போனி -2009 சுமந்த்

படம்
  போனி -2009 ராஜ் பிப்பல்லா சுமந்த், கீர்த்தி கர்பண்டா அனாதை ஆசிரமத்தில் வளரும் டிடி, சின்னா என்ற இருவருக்கும் ஒரே ஆதர்சம், அங்கு சமையல் செய்யும் பெண்மணி சரஸ்வதம்மா. இவர்தான் சிறுவர்களின் குறும்புகளுக்கு பாதிரியாரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களை ஆசிரமத்தில் தங்கி படிக்குமாறு பார்த்துக்கொள்கிறார். அவர் ஒருமுறை, எந்த விஷயம் செஞ்சாலும் காசு கிடைச்சாத்தான் செய்யறீங்க. ஆனா, பணத்தை விட மதிப்பான விஷயம் ஒண்ணு இருக்கு, என தன் நெஞ்சை தொட்டு அதிலிருந்து ஏதோ எடுப்பது போல எடுத்து இருவரின் கையில் வைக்கிறார் சரஸ்வதம்மா.  பணத்தை விட மதிப்பானதை டிடி, சின்னா அடையாளம் கண்டு கொண்டார்களா இல்லையா என்பதுதான் கதை.  படம் ஆக்சன் தான். அதிலேயே காமெடியை வித்தியாசமாக பயன்படுத்த நினைத்திருக்கிறார்கள். இதற்கு ஆண்ட்ரூவின் கேமரா, எம்.ஆர் வர்மாவின் அற்புதமான எடிட்டிங் உதவியிருக்கிறது. இதை நீங்கள் அறிய படத்தின் பாடல், சண்டைக்காட்சி, துரத்தல்களைப் பார்த்தாலே போதுமானது.  டிடி, சின்னா இருவரும் வளர்கிறார்கள். கிரி என்ற ரௌடியிடம் மாமூல் வசூல் செய்யும் ஆட்களில் ஒருவராக இருக்கிறார்கள். அத்தனை பேர்களிலும் டிடியும் சின்னாவும் மட்டு

உணர்ச்சியை விட செயல்தான் முக்கியம்! டாக்டர் 2021

படம்
  டாக்டர் நெல்சன் அனிருத் குழந்தைகளை கடத்தி அவர்கள் வயதுக்கு வந்ததும் அவர்களை விபச்சாரத்திற்கு விற்கும் கும்பலைப்பற்றிய கதை. வருண் பெண் பார்க்கப் போகும் வீட்டில் ஒரு சிறுமி காணாமல் போகிறாள். அவளை வருண் கண்டுபிடித்து தர உதவுகிறான். இதை எப்படி செய்தார்கள் என்பதுதான் கதை.  ஒருவருக்கு ஏற்படும் பிரச்னை என்பதை மூன்றாவது நபர் பார்க்கும்போது அதில் அவர் பெரிதாக தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார். அந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை அதில் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று பார்ப்பதே இன்று உலக வழக்கமாகியிருக்கிறது. இந்த இயல்பை புரிந்துகொண்டால் மட்டுமே படத்தை ரசிக்கமுடியும். இல்லையென்றால் பிளாக் அண்ட் ஒயிட் டிவியில் படம் பார்ப்பது போலவே இருக்கும்.  சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளும் பிரச்னையை படம் பேசுகிறது. நிறைய ஆங்கிலப் படங்கள் கூட அதனை வெகு தீவிரமாக பேசியுள்ளன. அப்படியில்லாமல் அதனை அவல நகைச்சுவையாக மாற்றியதுதான் படத்தின் வெற்றி. படத்தில் நிறைய இடங்களில் வசனங்களுக்கு பதில் உடல்மொழியே நகைச்சுவைக்கு போதுமானதாக இருக்கிறது.  எஸ்கேவின் அனைத்து பிளஸ்களும் படத்தில் இருந்து எடுத்துவிட்டால் மீதி என்ன இருக்கும்? அதுத

குடும்பத்தை, காதலை காப்பாற்றுவதை விட நாடே முக்கியம்! ஸ்டோர்ம் ஐ - சீன தொடர்

படம்
              ஸ்ட்ரோம் ஐ சீன தொடர் Director: Yu Bo (于波) Screenwriter: Liang Zhen Hua , Jia Chang An , Jiang Da Qiao யூட்யூப் தீவிரவாத அமைப்புகளுக்கு விற்கப்படும் கனிம விற்பனையை உளவு அமைப்புகளை எப்படி கண்டுபிடித்து தடுக்கின்றன என்பதுதான் மையக்கதை . தேசிய பாதுகாப்பு , நாடு என்று வந்துவிட்டால் தனிப்பட்ட நபர்களுக்குள் காதலோ , நட்போ இருக்கக்கூடாது என உறுதியாக வலியுறுத்தும் தொடர் . சீனாக்காரர்கள் என்பதால் இப்படி கூறப்பட்டிருக்கலாம் . தேசிய உளவு அமைப்பின் தலைமையகம் ( பெய்ஜிங் ), ஜின்குவா என்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்தை கண்காணிக்கிறது . இதன் வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் சந்தேகமாக இருப்பதால் , தனது இரண்டு திறமையான அலுவலர்களை சாங்குவான் நகருக்கு அனுப்புகிறது . சாங்குவான் நகரில் உள்ள உளவு அமைப்பின் கிளைப்பிரிவு உளவாளி ஒருவரை பின்தொடர்கிறது . ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது . ஆனால் அந்த உளவாளியை பின்தொடர்ந்து எங்கே இருக்கிறது என கண்டுபிடிப்பதில் மேற்சொன்ன இரண்டு திறமைசாலிகள் உதவுகின்றனர் . கிளை அமைப்புடன் தலைமையக ஆட்கள் இருவரும்

காதலும் குற்றவுணர்ச்சியுமாக அலைக்கழிக்கப்படுபவனின் வாழ்க்கை! - பாடிகார்டு - கொரிய திரைப்படம்

படம்
                  பாடிகார்டு கொரிய திரைப்படம் கொரிய நிறுவனம் ஒன்றை கேங்ஸ்டர் ஒருவர் கைப்பற்ற நினைக்கிறார் . இதற்காக அந்த குழுமத்தைச் சேர்ந்த ஒரே பெண்ணையும் கொல்ல நினைக்கிறார் . அவர் தப்பித்து ஓட அவருக்கு பெயர்தெரியாத இளைஞ ர் அடைக்கலம் கொடுக்கிறார் . அவர் உண்மையில் யார் , அந்த பெண்ணை கேங்ஸ்டர் தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை . வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் நண்பர்களின் உதவியுட் வாழும் இளைஞர்தான் நாயகன் . இவர் பாடிகார்டாக முதலில் வேலை செய்தவர்தான் . ஆனால் இறந்தகால சம்பவங்களால் மனம் வெறுத்து வேலையிலிருந்து விலகியவர் , மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் . அந்த பழைய நினைவுகளை நினைத்துக்கொண்டு கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறார் . பழைய விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்துவது போல மீண்டும் ஒரு பெண் அவரை நோக்கி ஓடி வருகிறார் . அவரைக் கொல்ல இருவர் துரத்தி வருகிறார்கள் . அவர்களிடமிருந்து அந்தப் பெண்ணை காப்பாற்றுகிறார் . அந்தப்பெண் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வசதியானவளாக இருந்தாலும் காலில் செருப்பு கூட இல்லை . தான் பாதுகாப்பாக சில நாட்கள் தங்கவேண்டுமென கூறியதால்