சோனம் வாங்சுக் எனும் கல்வியாளர் லடாக்கை எப்படி மாற்றினார்? - லடாக்கில் உதிக்கும் சூரியன்
லடாக்கில் உதிக்கும் சூரியன் தன் அறிவைக் கொண்டு சமூகத்திற்கே புதிய பாதை அமைக்கும் மனிதநேய மனிதர்களுக்கு மகுடம் சூட்டி உச்சிமுகர்ந்து பாராட்டும் ரோலக்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி(லாஸ் ஏஞ்சல்ஸ் 2015) அது. கண்கவர் மேடையில் இந்தியாவிற்கான தனித்துவ கனவை தன் மூளையில் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தார் சிறிய மனிதரொருவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள லடாக்கின் ப்பே என்ற கிராமத்தைச் சேர்ந்த அம்மனிதர், பாரம்பரிய உடையில் மக்கள் பங்களிப்புடன் தான் கட்டிவரும் சுற்றுச்சூழலுக்குகந்த பல்கலைக்கழகம் பற்றிக் கூறியது அங்கிருந்த பலரது புருவத்தையும் உயர வைத்தது. கண்டுபிடிப்பாளர் சோனம் வான்சுக் என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் 3 இடியட்ஸ் ஹிந்தி திரைப்படத்தின் அமீர்கான் கேரக்டரான புன்சுக் வாங்குடுவின் அசல் இவர்தான் என்றால் உங்களுக்கும் புரிந்திருக்குமே! 1988 ஆம் ஆண்டு லடாக்கில் அப்பகுதி மாணவர்களுக்காக செக்மோல்(Student's Educational and Cultural Movement of Ladakh(SECMOL)) என்ற பள்ளியை தொடங்கி நடத்திவரும் சோனம் வாங்சுக், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டதாரி. பட்டம் பெற்றவுடன் அமெரிக்கா செல்ல விசாவுக்காக க்யூவில் ந...