ஜென் இசட் இளைஞர்களை மத்திய அரசு பிரச்னைக்குரியவர்களாக கருதுகிறது! - திஷா ரவி, சூழல் போராட்டக்காரர்
ஐந்து மாதங்களுக்கு முன்னர் சூழலுக்காக போராடும் இளைஞர்களை மத்திய அரசு இளம்பெண் ஒருவரை கைது செய்து மிரட்டியது. அவர்தான் பெஙுகளூருவைச் சேர்ந்த திஷா ரவி. விவசாயிகள் போராட்டத்திற்கான இணைய டூல் கிட்டை இவரே வெளியிட்டார் என வழக்கு பதிவு செய்தனர். டீசல் செலவையும் கூட பொருட்படுத்தால் டெல்லியிலிருந்து போலீசார் பெங்களூருவுக்கு சென்று சூழல் பயங்கரவாதியான திஷா ரவியை வலை விரித்து பிடித்தனர். பிறகு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தேடிக்கொண்டிருக்கிற நிலையில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. இந்தியாவின் புதிய தேச துரோகி, பயங்கரவாதி என ஊடகங்கள் அலறிய திஷாவுக்கு வயது 22தான். அவரிடம் பேசினோம்.
கடந்த பிப்ரவரியில் உங்களை கைது செய்தார்கள். இப்போதும் உங்களுக்கு வெளிப்படையாக அரசுக்கு எதிராக பேச பயமாக இருக்கிறதா?
தவறுகள் நடந்தால் நான் அதைப்பற்றி வெளிப்படையாக பேசுவேன். நான் உள்ளுக்குள் பின்விளைவுகளை எண்ணி பயந்தாலும் எப்போதும் மனதுக்கு சரி என்று படுவதை பேசுவேன். எனது வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே எளிதாக கிடைத்துவிடவில்லை. எனவே வெளிப்படையாக பேசும் தன்மைக்கு தண்டனை கிடைப்பது யாரையும் தடுத்து நிறுத்தாது. சூழலுக்கு ஆதரவாக போராடும் மக்களின் கருத்தியலை ஒருவர் கூண்டில் அடைத்துவிட முடியாது.. என்னை தண்டிப்பதால் பிறரை போராட்டத்திலிருந்து தடுக்க முடியாது.
போராடும் இளைஞர்கள் பாதிக்கப்படமாட்டார்களா?
நான் அப்படி நினைக்கவில்லை. இன்னும் கூடுதலாகத்தான் அவர்கள் பொதுப்பணிகளுக்கு வருகிறார்கள். நிலம், நிலக்கரி, கனிமங்கள் என்ற பெயரில் மக்களைக் கொல்லாதீர்கள் என்றுதான் அனைவரும் சேர்ந்து கேட்கிறோம். மனிதநேயத்தின் மீது காதல் கொண்டுதான் இளைஞர்களாகிய நாங்கள் போராடுகிறோம். இதனை அரசு தனது எதிர்ப்பாக பார்க்கிறது. இதனை ஜென் இசட் இளைஞர்கள், எங்களை பிரசனையாக பார்க்கிறது அரசு என புரிந்துகொள்கிறார்கள்.
நீங்கள் எப்படி சூழல் போராட்டத்திற்குள் வந்தீர்கள்?
மவுண்ட் கார்மல் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்தபோதுதான் சூழல் போராட்டத்திற்குள் வந்தேன். 2019இல் இந்தியாவில் சூழல் அமைப்பான எஃப்எஃப்எஃபை தொடங்கினோம். பிறகு நடத்திய போராட்டம் சரியாக வரவில்லை. ஆனால் அந்த நினைவை இப்போதும் மறக்கமுடியாது.
இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
நான் இப்போது நிறைய நூல்களை படித்துக்கொண்டிருக்கிறேன். வரலாறு, நில உரிமைகள், பிற சூழல் தொடர்பான விஷயங்களை படித்துக்கொண்டிருந்தேன். அறிவை சேகரிக்க நேரம் கிடைக்காதோ என்ற பயம் எனக்கு எப்போதுமே உண்டு. எனவே படித்துக்கொண்டும் கட்டுரைகளை எழுதிக்கொண்டும் இருக்கிறேன். பிரைடேஸ் பார் ப்யூச்சர் அமைப்பின் சார்பில் சிங்கனாயக்கனகாலி ஏரி அருகே 6 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டு வருகிறோம்.
உங்கள் குடும்பதான் சூழல் போராட்டத்திற்கான ஆதாரமாக விளங்கியது என்று கூறியிருந்தீர்கள். எப்படி?
எனது தாத்தா பாட்டி இருவருமே விவசாயிகள்தான். நிலங்களுக்கு தண்ணீர் இல்லாமல் தடுமாறியதை நான் பார்த்திருக்கிறேன். எனது அம்மா பள்ளி செல்வதற்கு முன்னர் வீட்டுக்கு தேவையான நீரை கொண்டுவர அலைந்து திரிந்ததை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். மேலும் மங்களூரில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த போது மழைக்காலங்களில் வீடு வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கை. பதினெட்டு வயதுக்கு பிறகுதான் இணையம் எனக்கு அறிமுகமானது. அதனைப் பயன்படுத்தித்தான் சூழல் பிரச்னைகள் எப்படி மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை அடையாளம் கண்டேன். நான் இப்போது பெங்களூருவில் இருந்தாலும் எனது வீடு, நகரை விட்டு தொலைவில் இருக்கிறது. நான் இருக்கும் இடத்தை கிராமம் என்று கூட சொல்லலாம். இங்கு சாக்கடை வசதிகள் கூட ஒழுங்காக இல்லை. வசதியானவர்கள் இங்கு வசிக்கவில்லை. மோசமான சூழலில் இங்கு வாழ்பவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. இவையெல்லாம்தான் என்னை சூழல் பக்கம் கவனிக்க வைத்தன.
டைம்ஸ் ஆப் இந்தியா
மொஹூவா தாஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக