சூரிய ஒளி, ஆக்சிஜன் பட்டால் மட்கிப்போகும் பிளாஸ்டிக்!

 


செய்திஜாம்

ஆஹா!

மறுசுழற்சி!




சூரிய ஒளி பட்டாலே மட்கும் வகையில் புதிய பிளாஸ்டிக் வகையை சீனாவின் 

ஹூவாஸாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள தனித்துவமான மூலக்கூறுகள் ஒளி, தண்ணீர் பட்டால்  உடனே ஒரே வாரத்தில் மட்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்படி மட்கும்போது சக்சினிக் அமிலத்தை வெளியிடுகிறது. இதனை மருந்து தயாரிப்பில் அல்லது உணவு உற்பத்தியில் பயன்படுத்தமுடியும். இந்த பிளாஸ்டிக் ஆராய்ச்சி பயன்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும். 

https://www.indiatimes.com/technology/science-and-future/plastic-sunlight-disintegration-one-week-544896.html

வெள்ளத்தில் நகரம்!



மழை வெள்ளத்தில் சாலைகள் மிதக்கும் காட்சி!

இடம், ஜெர்மனி, பிளெஸ்ஸம்

அப்படியா!

பற்றாக்குறை!



குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்ச்சியானார்கள். இதனால் அங்குள்ள 20 மாவட்டங்களில் 3000 கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. பள்ளி தலைமையாசிரியர், கூடுதல் மாணவர்களை படிக்க வைக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை முறை, ஷிப்ட் முறை ஆகியவற்றை பின்பற்றலாம் என கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். குஜராத்தில் வகுப்பறை மட்டுமல்லாது ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. 

https://indianexpress.com/article/india/after-mass-promotion-gujarat-faces-deficit-of-classrooms-for-class-11-students-7411158/


அபாரம்!

ஐயமிட்டு உண்!




சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் இஷா பாத்த்திமா ஜாஸ்மின்.  நான்கு ஆண்டுகளாக ஆயிரம் பேருக்கு மேல் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார். தனது அப்பா வழங்கும் நன்கொடைகள் மூலம் ஊக்கம் பெற்ற இஷா, 2017இல்  தி  பப்ளிக் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினார். ஐயமிட்டு உண் என்ற பெயரில் உணவு, உடை, நூல் ஆகியவற்றை பிறருக்கு கொடுக்கத் தொடங்கினார். சென்னையில் இந்த முறையில் எட்டு இடங்களும், பெங்களூருவில் இரண்டு இடங்களும் செயல்பட்டு வருகின்றன. பெருந்தொற்று காலத்தில் பலருக்கும் உணவு தயாரித்து தன்னார்வலர்கள் மூலம் வழங்கியுள்ளார் இஷா. 

https://www.thebetterindia.com/258629/community-fridge-deliver-food-chennai-covid-heroes-feeding-poor-shell-india/ 

பாராட்டுகள்!

கல்விக்கு உதவி!



ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர குமார் யாதவ், மாற்றுத்திறனாளி. தனது குறையை பெரிதுபடுத்தாமல்  மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் உபேந்திரா, பெருந்தொற்று காரணமாக பாடம் கற்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு  கட்டணமின்றி பாடம் எடுத்துள்ளார். மூன்று குழந்தைகளோடு தொடங்கி அறுபது மாணவர்கள் வரை யாதவின் வகுப்பில் சேர்ந்துள்ளனர். தனது குழந்தைக்கு பாடம் கற்றுத்தர முடியுமா என  குழந்தையின் அப்பா கேட்டதால் பாடம் கற்றுக்கொடுப்பதைத் தொடங்கியிருக்கிறார். 

https://www.newindianexpress.com/thesundaystandard/2021/jul/18/no-hurdle-too-high-for-differently-abled-jharkhand-teen-teaching-village-children-2331715.html


அடச்சே!

Phones of 2 Ministers, 3 Opp leaders among many targeted for surveillance: report



In what could trigger a stormy start to the Monsoon session of Parliament commencing Monday, a global collaborative investigative project has revealed that Israeli company NSO Group’s Pegasus spyware targeted over 300 mobile phone numbers in India including that of two serving Ministers in the Narendra Modi government, three Opposition leaders, one constitutional authority, several journalists and business persons.

https://indianexpress.com/article/india/project-pegasus-phones-of-2-ministers-3-opp-leaders-among-many-targeted-for-surveillance-report-7411027/


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்