2021 ஜப்பான் ஒலிம்பிக் டார்ச்சில் என்ன புதுசு?
ஒலிம்பிக் டார்ச்சில் என்ன இருக்கிறது?
ஜப்பானிய வடிவமைப்பாளர் ஒலிம்பிக் ஜோதியை செர்ரி பிளாசம் வடிவில் உருவாக்கியுள்ளார். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 30 சதவீத அலுமினியம் மறுசுழற்சி செய்யப்பட்டது. இந்த உலோகம், 2011ஆம் ஆண்டு சுனாமி, நிலநடுக்கம் காரணமாக இறந்துபோனவர்களின் குடியிருப்பு பகுதியிலிருந்து பெறப்பட்டது.
பூவின் இதழ்களிலிருந்து நெருப்பு வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு கம்பியூஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று அதிக வெப்பம் வரும்படியான நீல நிற ஜூவாலை, அடுத்து ஜூவாலை தெரியாத சிவப்பு நிற கம்பியூஷன் நுட்பமும் உள்ளது.
ஆன் ஆப் சுவிட்சுடன் டார்ச் உள்ளது. இதில் எரிபொருளாக ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. திரவ எரிபொருள் அழுத்தப்பட்டு வாயுவாக மாறி நெருப்பு ஜூவாலை எரிய வைக்கப்படுகிறது.
ஒலிம்பிக் ஜோதியை மொத்தம் 10 ஆயிரம் வீர ர்கள் ஏந்திக்கொண்டு வருவார்கள். ஒரு வீர ர் 200 மீட்டர் தூரம் அதனை ஏந்துவார்கள். 1.2 கி.கி எடை கொண்ட டார்ச், 71 செ.மீ நீளமானது.
how it works
கருத்துகள்
கருத்துரையிடுக