இருபது ஆண்டுகாலப் போரில் தோற்றுப்போய் வெளியேறும் அமெரிக்கா!

 








மக்களுக்காக கட்டப்பட்ட கல்லறை


ஆங்கிலேயர்கள், ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் என ஆப்கன் மண்ணில் தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது. அங்கு நடந்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டது. இறுதியாக ஆகஸ்ட் 31ஆம்  தேதியோடு அங்கிருந்து முழுமையாக வெளியேறுவதாக கூறியுள்ளது. வணிக கட்டிடங்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் கோபமான அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளை அழிக்க முயன்றது. ஆனால் இதற்கு பதிலீடாக 2500 குடிமக்களை இழந்துள்ளது. ப்ரௌன் பல்கலைக்கழக ஆய்வுப்படி, ஏப்ரல் 2021 வரை பாகிஸ்தானிலும், ஆப்கனிலும் 2,41,000 பேர் பலியாகியுள்ளனர். 71,000 குடிமக்கள் என்பதும் ஆய்வில் வெளியாகியுள்ளது. இவர்கள் பலரும் நாட்டில் வாழும் சாதாரண குடிமக்கள்தான் என்பதில் அரசுகளுக்கு கவனம் செல்லவில்லை. இந்த எண்ணிக்கை தோராய எண்ணிக்கை என்பதால் முழுமையாக கணக்கிடும்போது பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். 

அமெரிக்காவின் ஆப்கன் ஊடுருவலுக்கு இரண்டு காரணங்கள்தான் இருந்தன. ஒன்று, அல்கொய்தா அமைப்பை பலவீனப்படுத்துவது, இரண்டாவது, அதன் தலைவரான பின்லேடனை அழிப்பது. 2000ஆம் ஆண்டு முதலே அல்கொய்தா அமைப்பு பலவீனமடையத் தொடங்கியது. 2011இல் அதன் தலைவர் பின்லேடனை அமெரிக்கா கண்டுபிடித்து சுட்டுக்கொன்றது. அவர் தங்கியிருந்த நாடு, பாகிஸ்தான். அமெரிக்காவிடமிருந்து தீவிரவாதத்தை அழிக்க மானியம் பெறும் நாடுதான்  என்பதில் பலருக்கும் ஆச்சரியமிருக்காது. போரை நிறுத்திவிட்டு சொந்த நாட்டில் உள்ள பிரச்னைகளை பார்க்க அமெரிக்கா விரும்புகிறது. அதற்கு முக்கியமான காரணம், கோவிட் -19, பொருளாதாரம், சீனாவின் பல்வேறு ஆதிக்க முயற்சிகள் ஆகும். தலிபான்களுடன்  அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ள கூடாது என்ற ஒப்பந்தம் அடிப்படையில் அமெரிக்கா வெளியேறியுள்ளது. 

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வலுவானார்கள் என்றால் அங்கு இதற்கு முன்னிருந்த ஜனநாயக அரசு, அரசுப்படைகள், குடிமைச்சமூகம் என  அனைத்துமே பலவீனமாகும். இருபது ஆண்டுகளாக உருவான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகள் இனி இருக்காது. ஆப்கானிஸ்தான் உருவாகும் வன்முறைகளுக்கு இனி பாகிஸ்தான் மட்டுமே பொறுப்பாகும். இந்தியா இனி தனது அதிகாரிகளை தனது நாட்டுக்கு அழைத்துக்கொள்ளும். ஆப்கானிஸ்தான் இனி இந்தியாவுக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலாக இருக்கும். அமெரிக்கா, பிரிட்டிஷ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நீண்டகாலம் போரிட்டு தோல்வியுற்று தனது நாடு திரும்பியுள்ளது. 

ஹெச்டி


கருத்துகள்