இடுகைகள்

டையன் ஃபோசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அணுகுண்டு தயாரிப்பு, கொரில்லா பாதுகாப்பு, ஹெச்ஐவி வைரஸ் கண்டுபிடிப்பு, டிஎன்ஏவின் உருவ அமைப்பு கண்டறிந்த சாதனைப் பெண்கள்!

படம்
                    சியன் சுங் வு இயற்பியல் ஆராய்ச்சியாளர் சீனாவைத் தாயகமாக கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் இவர் . அணு இயற்பியலாளராக உலகின் முதல் அணுகுண்டைத் தயாரிக்க பங்களிப்பை அளித்தவர் . 1949 ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது . இதன் காரணமாக அமெரிக்கா , சீனா உறவு பாதிக்கப்பட்டது . 1973 ஆம் ஆண்டு வரையில் சியன் தனது தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லமுடியாது தவித்தார் . சீனாவில் உள்ள நான்ஜியாங் என்ற பல்கலைக்கழகத்தில் கணிதம் , இயற்பியலை கற்றுத்தேர்ந்தார் . பிறகு அமெரிக்காவில் கதிர்வீச்சு பற்றி படிக்க சென்றார் . இவரது பேராசிரியர் எர்னஸ்ட் லாரன்ஸ் , அணு துகள்களை தூண்டும் கருவி ஒன்றை உருவாக்கினார் . சியன் அதனைப் பயன்படுத்தி அணுக்களை பிரித்து கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்கினார் . இவற்றில் புரோட்டான்கள் ஒரே எண்ணிக்கையிலும் நியூட்ரான்கள் வேறுபட்ட எண்ணிக்கையிலும் இருக்கும் . 1940 இல் சியன் தனது படிப்பை நிறைவு செய்தார் . கதிரியக்கம் பற்றி மேலும் அறிய அமெரிக்காவில் தங்கியிருந்தார் . அப்போதுதான் அவருக்கு மான்ஹாட்டன் எனும் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கி