இடுகைகள்

புகழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Time magazine 100 peoples- Amanda sefried, ariana debose, Nathan chen

படம்
  டைம் 100 - அரியானா டிபோஸ்  ஆச்சரியமூட்டும் கலைஞர்  அரியானாவை நான் க்வாட்ரூபல் த்ரெட் என்றுதான் கூறுவேன். அவர் வெறும் நடனக்கலைஞர் மட்டுமல்ல சிறந்த நடிகை, பாடகி என்பதோடு கருணையும் கொண்டவர். நான் அவரை முதன்முதலாக ஹாமில்டனில்தான் அவரது நடிப்பைப் பார்த்தேன். அதில் அவர் ஏற்றிருந்த பாத்திரம் மிக மெதுவாக நகர்ந்து வரவேண்டும். அதற்கு உடல் வலிமையும், நடிப்புத் திறனும் வேண்டு்ம். அதை அரியானா மிக அற்புதமாக சமாளித்திருந்தார். அவரை நான் மீண்டும் அதேபோலான பாத்திரத்தில் பார்க்க ஆசையாக இருக்கிறது. அண்மையில் நாங்கள் ஸமிகாடூன் என்ற டிவி நிகழ்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அதில் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம். அரியானாவைப் பொறுத்தவரை சிறுபிள்ளைத்தனமாக, வேடிக்கையாக நடந்துகொண்டார். அவரது செயல்பாட்டைப் பார்த்தபோது பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதவர் என புரிந்துகொண்டேன். எந்த பயமுமில்லை. அவர் எனது பாத்திரத்தைப் புரிந்துகொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டார்.  வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற நடிகை. தன்னை வெளிப்படையாக பால் புதுமையினர் என்று கூறிக்கொண்

காந்தியை குழிதோண்டி புதைக்க முயலும் இந்து தீவிரவாத அமைப்பும், அதன் அரசியல் அமைப்பும் !

படம்
          ஒருவர் நிஜத்தில் எப்படி இருக்கிறார் என்பதும் , தன்னை எப்படி வெளியே காட்டிக்கொள்கிறார் என்பதிலும் தான் வேறுபாடுகள் உள்ளன . ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரைப் பார்த்திருப்பீர்கள் . அவரது செயல்களையும் அறிந்திருப்பீர்கள் . சிறிய உருவம் கொண்ட மனிதர்தான் லட்சக்கணக்கான யூத மக்களின் அழிவுக்கு காரணமானவர் . இதை ஊடகங்களின் வழியே எளிதாக அறிய முடியாது . அவர் வைத்திருந்த ஊடக பிரசாரகர்கள் குழந்தைளள் , மாணவிகளோடு இருக்கும் புகைப்படங்களைக் காட்டுவார்கள் . சைவ உணவுப்பழக்கம் கொண்டவர் . இசையை ரசிப்பவர் . குறையாததற்கு ஓவியர் வேறு . ஆனால் அவர் புகைப்படத்தின் பின்னாலுள்ள அசுர மனதை அறிந்தவர்கள் மிகச்சிலரே . இந்தியாவில் அப்படி அரசியல் களங்களில் வேறுபட்ட காரண காரியங்கள் நடக்கும் . புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் யோக்கியர்களின் முகத்திரை கிழிந்துவிடும் . காவிக்கட்சி ஒருமுறை காந்தி சங்கல்ப் யாத்ரா என்ற பேரணியை தொடங்கியது . அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கிய பேரணியில் சுத்தம் , உண்மை , சுய ராஜ்ஜியம் , அகிம்சை ஆகிய விஷயங்கள் முன்வைத்து பேசப்பட்டன . ஆனால் காந்தி வாழ்நாள் முழுக்க

கொரியாவிலிருந்து கற்போம்!- புகழ்பெற்று வரும் வார்த்தைகள்

படம்
  இட்ஸ் ஓகே டு நாட் பி ஓகே  கொரோனா காலத்தில் நெட்பிளிக்ஸில் ஏகப்பட்ட கொரிய டிவி தொடர்களை பார்த்த மக்கள், அந்த மொழி வார்த்தைகள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி கூட குறிப்பிட்ட வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இப்படி பொது அறிவை வளர்த்துக்கொள்ளாவிட்டால் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எப்படி நிரூபிப்பது...  ஹலியு தென்கொரிய டிவி தொடர், படம், இசை, ஃபேஷன், உணவு ஆகியவற்றை எல்லாவற்றையும் இந்த சொல்லால் குறிக்கலாம்.  மன்ஹ்வா தென்கொரிய கார்ட்டூன்களைக் குறிக்கும் சொல். ஜப்பானிய மங்கா தாக்கத்தால் உருவான கார்ட்டூன், காமிக்ஸ் நூல்களை இப்படி சொல்கிறார்கள்.  டேபக் அற்புதம், ஆஹா என்று புகழ்கிறார்களே அதேதான்.  ஹாஜிமா  இப்படி செய்யாதே என்று கூறுவதற்குத்தான் இந்த கொரிய வார்த்தை. சாரங்கே என்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம். கே டிராமா என்றால் இந்த வார்த்தைகள் இல்லாமல் வசனங்களை அந்த நாட்டு இயக்குநர்கள் எழுதுவதே இல்லை.  முக்பாங் லைவாக தட்டு நிறைய உணவு வைத்துக்கொண்டு பார்வையாளர்களிடம் ஒருவர் பேசுவார். இப்படி லைவாக பேசும் வீடியோவை முக்பாங் என்கிறார்கள்.  ஐகூ அடக்க
படம்
                    சூப்பர் பிஸினஸ்மேன் ரிச்சர்ட் பிரான்சன் இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த பிஸினஸ்மேனைப் பற்றி படித்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது . ஆம் இவர் தனது பொருட்களை எப்பாடுபட்டாவது தானே விளம்பரப்படுத்திவிடுவார் . மார்க்கெட்டிங்கா எனக்கு வராதே சுண்டுவிரலைக் கடிக்கும் பழக்கம் இவருக்கு கிடையவே கிடையாது . ஆல்பம் ரெக்கார்டுகள் முதல் மொபைல்போன் , இணையசேவை நிறுவனங்கள் , ரயில் , குளிர்பானங்கள் , விமான நிறுவனம் என மொத்தம் 360 நிறுவனங்களை வைத்திருக்கிறார் . இதன் தோராய மதிப்பு 2.6 பில்லியன் வரும் . இங்கிலாந்தில் புகழ்பெற்ற வணிகர் இவர்தான் . இந்நேரம் இவரை யாரென்று யூகித்திருப்பீர்கள் . வர்ஜின் காலாடிக் என்ற பெயரில் மக்களை விண்வெளிக்கு கூட்டிச்செல்ல திட்டம் போட்டுக்கொண்டிருக்கும் ரிச்சர்ட் பிரான்சன்தான் அவர் . பெரும்பாலான இங்கிலாந்து பெருநிறுவன முதலாளிகளைப் பொறுத்தவரை அவர்கள் வேலை செய்யும் நிறுவன ஆட்களுக்கு மட்டுமே அடையாளம் தெரியும் . ஆனால் ரிச்சர்டைப் பொறுத்தவரை உலகிலுள்ள அனைவருக்கும் அவரை அடையாளம் தெரியும் . தெரிய வேண்டும் எ

2020 இல் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய 5 விஷயங்கள்!

படம்
2020இல் இந்தியா டி.சிவக்குமார், குழுமத் தலைவர் ஆதித்ய பிர்லா குழுமம் கல்வி! நாம் மதிய உணவத்திட்டத்தில் நிறைய புதுமைகளை செய்திருக்கிறோம். இதனால் 96.5 சதவீத மாணவர்கள் மதிய உணவைப் பெறுகிறார்கள். இதேபோல எதிர்கால சூழல்கள், சவால்களை சந்திக்க ஆசிரியர்களும் தயாராக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். ஆசிரியர்கள் தம் வாழ்க்கை முழுவதும் கற்பவர்களாக இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டுவது அவசியம். வளர்ந்து தொழிலதிபர்களாக, வாழ்வில் சிறந்த மனிதர்களாக உள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கு முன்மாதிரியாக கூறுவது ஆசிரியர்களை என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும் அரசு அதிகாரிகளை மக்கள் சந்திக்க முடியாத தடைகள் நிறைய உள்ளன. மனதளவிலும், நடைமுறையிலும்தான். நாம் அவற்றைக் களைந்தால்தான் மக்களின் சிந்தனைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை செயலாக்கம் செய்ய முடியும். 2000க்கும் மேல் பிறந்தவர்கள் இனி செயல்படுவது முழுக்க இதை நோக்கி இருக்கவேண்டும் என நினைக்கிறேன். கூட்டாளிகள் தேவை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பாக செயற்படும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. இவை உலகளவில் சரியான நிறுவ