இடுகைகள்

கிரிதரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடி மாணவர்களுக்காக பள்ளிக்கட்டிடம் கட்டியவர் - கிரிதரன்

படம்
    மரத்தின் கீழே மாணவர்கள் படிப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள். ரவீந்திரநாத்தின் சாந்தி நிகேதனைப் போன்ற கல்விமுறையை இங்கேயும் பின்பற்றுகிறார்கள் என்றா? படித்தவர்கள், மாற்றுக்கல்வி முறையை கற்றுத் தரும் ஆட்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் சாதாரணமான மக்கள் நினைப்பது, பள்ளிக்கட்டிடம் எங்கே என்றுதான். அப்படித்தான் யதார்த்தமாக ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டார் வேலூரின் காட்பாடியைச் சேர்ந்த கிரிதரன். அந்த கேள்விக்கு பதில் தே அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம், கிரிதரன் பள்ளி மாணவர்களுக்காக 400 பேர்களிடம் நிதியுதவி பெற்று பள்ளிக்கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார். இன்னும் அதில் டிவி பொருத்தும் விரிவாக்கத் திட்டம் இருக்கிறதாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது 39ஆம் வயதில் மருதவலியம்படி வந்து பார்த்தபிறகுதான் அவருக்கு பள்ளிக்கட்டிட யோசனை தோன்றியிருக்கிறது. மரத்தடியில் பாடம் கற்ற மாணவர்கள் பல்வேறு இயற்கைச்சூழல் பிரச்னைகளால் கல்வி கற்க முடியாத இடையூறுகள் இருந்தன. காற்று வேகமாக அடித்தால் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகள் காதில் கேட்காது.   முக்கியமாக இப்படி பாடம் கற்றுக்கொண்டிருந்த மா