இடுகைகள்

நெசவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டவுன்சிண்ட்ரோம் குறைபாட்டை நெசவு மூலம் சமாளிக்கும் இளைஞர்!

படம்
  ஷிரவண் குமார், டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்டவர். இவர், மயிலாப்பூரிலுள்ள டவுன்சிண்ட்ரோம் ஃபவுண்டேஷனில் பயிற்சிகளை செய்துவந்தார். ஆனால் பெருந்தொற்று அனைவரையும் பாதித்தது. இதனால், அந்த மையம் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஷரவண் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார்.  இதற்காகவே இவரது பெற்றோர் நெசவு நெய்வதற்கான கருவியை (தறி) வீட்டிற்கு கொண்டு வந்தனர். இப்போது காலையில் நாற்பத்தைந்து நிமிடம், மாலை ஒரு மணிநேரம் நெசவு செய்வதில் ஷிரவண் ஈடுபடுகிறார். மீதி நேரங்களில், பெற்றோர் வாங்கிக்கொடுத்த மடிக்கணினி மூலம் டேட்டா என்ட்ரி செய்ய கற்று வருகிறார்.  தறியை வாங்குவதற்கு முன்னதாகவே அதனை எப்படி இயக்குவது என வீடியோ அழைப்பு மூலம் ஷிரவண் கற்றுக்கொண்டார். இவருக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட ஸ்ரீனிவாஸ் உதவியிருக்கிறார். நெசவு செய்வதை இப்படிக் கற்றுக்கொண்ட ஷிரவண், 250க்கும் மேற்பட்ட துணிகளை நெய்து விற்றிருக்கிறார். இதை ஷிரவணின் பெற்றோர் வணிகமாக செய்யவில்லை. ஷிரவண், முடிந்தவரை கவனமாக நெசவு செய்வதை செய்யவேண்டும். உற்பத்தித் திறன் தன்மையில் அவன இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள். இப்படித்தான் தனது குடும்ப வாட

உலகை மாற்றிய மனிதர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கண்ணாடி, பசை, மேப், சோப், சக்கரம்

படம்
        pixabay             சிறந்த கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கருவிகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு… ஆதிகாலத்தில் மனிதர்கள் கற்களை கூர்மையாக்கி கருவிகளாக பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு வேட்டையாடுதல், விலங்குகளை தோல்களை உரிப்பது ஆகிய வேலைகளை எளிமையாக்கின. கற்கருவிகளை கூர்மையாக்குவதற்கான முறைகளையும் மனிதர்கள் மெல்ல கண்டுபிடித்தது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி என்றே கூறவேண்டும்.   வரைபடங்கள் 6500 கி.பி இன்று சாப்பிடசெல்ல, மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க, பார்மசியைத் தேட என  அனைத்துக்கும் கூகுள் மேப் ஆப் உள்ளது. ஆனால் அன்று வரைபடங்களே கிடையாது. அந்த நிலையை யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. கி.பி 6500 ஆண்டுகளாக மனிதர்கள் வரைபடங்களே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். தொன்மையான பாபிலோனியாவில்தான் வரைபடங்கள் முதன்முதலில் உருவாயின. இதற்கு உதாரணமாக துருக்கியில் தற்போது அறியப்பட்டுள்ள கடல்ஹோயுக் எனும் சுவர் வரைபடங்களை சான்றாக பார்க்கலாம். இப்படம் நகரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தது. பசை கி.பி 4000 இன்று பெவிஸ்டிக், க்ளூஸ்டிக், உள்ளூர் டிய