இடுகைகள்

கழுகு ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரும்பருந்தின் வாழ்க்கை பற்றி அறியும் ஆய்வு!

படம்
  கரும்பருந்து கரும்பருந்துக்குப் பாதுகாப்பு!  இயற்கைச்சூழலில் கரும்பருந்தின் (Milvus migrans) பங்கு,குப்பைகளைத் தூய்மைப்படுத்துவதுதான். டில்லியைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரி  இளைஞர்,நிஷாந்த்குமார். இவர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள குப்பைக்கிடங்குகளை அடிக்கடி பார்ப்பார். அங்கு இரைதேட வரும் கரும்பருந்துகள் வானில் வலம் வரும் காட்சி அவருக்கு பிடித்தமானது. ஆனால் இப்படி அவர் பார்வையில் படும்  கரும்பருந்துகளின்  எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. உண்மையில் கரும்பருந்துகளுக்கு என்னவானது என்ற கேள்வியே 2009ஆம் ஆண்டு,கரும்பருந்து பாதுகாப்பு திட்டத்தை (black kite project ) ஊர்வி குப்தா என்பவரோடு சேர்ந்து தொடங்கவைத்தது.  இந்த திட்டத்திற்கான உதவிகளை வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வழங்குகிறது. பொதுவாக குப்பைக்கிடங்குகளில் காணும் சிறிய பருந்துகள்,(Small indian kites)  கரும்பருந்தின் இனத்தைச் சேர்ந்த துணைப்பிரிவைச் சேர்ந்தவை. டில்லியில் கரும்பருந்துகளுக்கான உணவில் குறையேதும் இல்லை. டில்லியின் தொன்மையான நகரப்பகுதிகளில் முஸ்லீம்கள், கரும்பருந்துகளுக்கென இறைச்சித்துண்டுகளை உணவாக வீசி வருகிறார்கள். இ