ட்ரெண்டிங் நட்சத்திரங்கள் 2019
டைம் உலகை மாற்ற வேண்டும் என்றால் நாம் யாரைப் பற்றி எழுதுவோம். சோடாப்புட்டி கண்ணாடிபோட்டு கண்டுபிடிப்பாளர், பில்லியன் டாலர்களை குவித்த தொழிலதிபர் இவர்களைத்தானே. ஆனால் மக்களின் அறிவுத்திறனைக் கூட்டுகிற, மன உளைச்சலை குறைக்கிற ஆட்களுக்கும் உற்பத்தித் திறனுக்கும் எந்த தொடர்பும் இல்லையா? நிச்சயம் உண்டு. அப்படி சில நபர்களை இங்கு பார்ப்போம். Demi Adejuyigbe இணையத்தில் டெமியின் காமெடி மிக பிரசித்தம். இவரின் கில்மோர் கய்ஸ் பலருக்கும் விருப்பமான பாட்காஸ்ட். ரெடி பிளேயர் ஒன்னுக்கான தேர்ந்தெடுக்கப்படாத பாடல் இசைக்கும் யூட்யூப் வீடியோ பதிவு என கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோலாக்குகிறார். தற்போது லேட் நைட் ஷோவில் அசத்துகிறார் இந்த அமெரிக்காவின் காமெடி எழுத்தாளர். Megan Amram இன்றுதான் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார் என்று கடந்த இரு ஆண்டுகளில் அம்ரம் எத்தனை முறை எழுதியிருப்பாரென்று கணக்கு வழக்கே கிடையாது. ட்விட்டரில் காமெடியாக எழுதியே தனக்கான வேலைவாய்ப்புகளை சம்பாதித்துக் கொண்டு புத்திசாலி இவர்தான். T he Simpsons , Parks a...