இடுகைகள்

டெக்- கூகுள் சர்ச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஃபாலோ செய்யும் கூகுள்!

படம்
பின்தொடரும் கூகுள் ! ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸில் தனது ப்ரௌசர் மற்றும் சர்ச் எஞ்சினை பதிப்பதோடு இணையத்திலுள்ள பல்வேறு சேவைகளையும் நீக்க முடியாதபடி செட் செய்வது கூகுளின் வின்னிங் தந்திரம் . தற்போது கூகுள்மேப் வசதி , போனில் ஜிபிஎஸ் வசதியை நிறுத்தினாலும் பயனரின் இடத்தை பதிவு செய்யும் அதிர்ச்சி விஷயத்தை அசோசியேட் பிரஸ் பகிரங்கப்படுத்தியுள்ளது . சில ஆப்களை போனில் தரவிறக்கி பதிக்கும்போதே பல்வேறு தகவல்களை பெறுவதற்கான அனுமதிகளை பெற்றுவிடுகின்றன . ஜிபிஎஸ் , தொடர்புவிஷயங்களை பெறுவதற்கு மறுத்தால் அவற்றை நாம் பயன்படுத்தமுடியாது . கூகுள் மேப்ஸ் இவ்வகையில் பயனர்களின் இடம் குறித்த தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சேகரித்து வைக்கிறது . போனில் இடம் அறியும் வசதியை ஆஃப் செய்தால் கூகுள் உங்களது இடம் பற்றிய செய்திகளை சேகரிக்காது என்பது சர்ச்சைகளுக்கு கூகுள் சொன்ன பதில் . இடமறியும் வசதியை அணைத்தாலும் இணைய ஆப் வழியாக கூகுள் தொடர்ச்சியாக கண்காணிப்பதை பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குனெஸ் அகார் உறுதிபடுத்தியுள்ளார் ." கூகுள் தன்னுடைய மென்பொருள் சேவையை மேம்படுத்தவே இவ்வகையில் செயல்படுகிறது